Published : 14 May 2022 04:00 AM
Last Updated : 14 May 2022 04:00 AM
விருத்தாசலம் பேருந்து நிலையத்திலிருந்து சிதம்பரம் நோக்கி சென்ற தனியார் பேருந்தில் 30 பயணிகள் இருந்தனர். விருத்தாசலம்-பொன்னேரி புறவழிச்சாலை ரவுண்டானா அருகே நெய்வேலி யில் இருந்து சாம்பல் ஏற்றிக்கொண்டு அரியலூர் சென்ற லாரி வந்து குறுக்கிட, அந்த தனியார் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரி ஓட்டுநர் ஊத்தங்கால் கிராமத்தைச் சேர்ந்த வேல்ராஜ் உள்பட 4 பேர் காய மடைந்தனர்.
அவர்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். பேருந்தில் பயணம் செய்த 30 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்தால் இதனால் விருத்தாசலம் - சிதம்பரம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment