Last Updated : 16 May, 2016 07:28 AM

 

Published : 16 May 2016 07:28 AM
Last Updated : 16 May 2016 07:28 AM

அனைத்து காப்பீட்டு புகார்களுக்கும் தீர்வு: 2-வது முறையாக இன்சூரன்ஸ் ஆம்புட்ஸ்மேன் சாதனை

சென்னையில் உள்ள காப்பீட்டு குறைதீர்ப்பாளர் (இன்சூரன்ஸ் ஆம்புட்ஸ்மேன்) கடந்த ஆண்டில் ஆயிரத்து 170 புகார்களுக்கு தீர்வு கண்டுள்ளார். இதன் மூலம் 2-வது முறையாக அனைத்து புகார்களுக்கும் தீர்வு என்ற சாதனை படைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் காப்பீட்டு குறை தீர்ப்பாளர் வீரேந்திர குமார், அண் மையில் ஓய்வு பெற்றார். ஓய்வு பெறுவதற்கு முன்னதாக அவர் ‘தி இந்து’ தமிழ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

வங்கி சேவைகள் தொடர்பான புகார்களுக்கு தீர்வு காண வங்கி குறைதீர்ப்பாளர் இருப்பதுபோல், இன்சூரன்ஸ் சேவை தொடர்பான புகார்களை அளிக்க காப்பீட்டு குறைதீர்ப்பாளர் உள்ளார். இதற் காக கடந்த 1998-ம் ஆண்டு காப் பீட்டு குறைதீர்ப்பாளர் (இன்சூ ரன்ஸ் ஆம்புட்ஸ்மேன்) ஏற்படுத் தப்பட்டார். இங்கு காப்பீட்டு சேவை கள், காப்பீட்டு ஏஜென்ட்கள், காப் பீட்டு நிறுவனங்கள் தொடர்பான புகார்கள் விசாரிக்கப்பட்டு பாலிசி தாரர்களுக்கு இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தரப்படுகி றது.

எங்கள் அலுவலக எல்லை வரம்புக்குள் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகள் அடங்கியுள்ளன. இங்கு ஆயுள் காப்பீடு மற்றும் பொதுக் காப்பீடு தொடர்பான புகார்கள் பெறப்பட்டு தீர்வு காணப்படுகிறது. இதன்படி, 2015-16-ம் ஆண்டில் ஆயிரத்து 170 புகார் மனுக்கள் பெறப்பட்டன. இதில், 656 ஆயுள் காப்பீடு தொடர்பான புகார்கள், 514 பொது காப்பீட்டு தொடர் பான புகார்கள் ஆகும். இவை அனைத்துக்கும் தீர்வு காணப்பட் டுள்ளது. இதன் மூலம், 2-வது முறையாக அனைத்து மனுக்களுக் கும் தீர்வு என்ற நிலை எட்டப்பட்டுள் ளது. மேலும், பாலிசிதாரர் களுக்கு ரூ.1 கோடியே 89 லட்சம் இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தரப்பட்டுள்ளது.

ஆயுள் காப்பீடு தொடர்பான புகார் மனுக்களில் 72.97 சதவீத தீர்ப்புகள் புகார்தாரர்களுக்கு சாத கமாகவும், 27.03 சதவீத தீர்ப்புகள் காப்பீட்டு நிறுவனங்களுக்கு சாதகமாகவும் வழங்கப்பட்டுள் ளது. இதன் மூலம், என்ன நோக்கத் துக்காக காப்பீட்டு குறைதீர்ப்பாளர் அலுவலகம் ஏற்படுத்தப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேற்றப்பட் டுள்ளது.

காப்பீட்டு குறைதீர்ப்பாளர் அலு வலகம் குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், பல்கலைக்கழகங் கள், நுகர்வோர் அமைப்புகள் மத்தி யில் விழிப்புணர்வை ஏற்படுத்து வதற்காக கருத்தரங்குகள், கூட்டங் கள், குழு விவாதங்கள் நடத்தப்படு கின்றன. எனினும், பொதுமக்கள் மத்தியில் இதுகுறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படாதது வருத் தம் அளிக்கிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x