Published : 10 May 2022 04:51 PM
Last Updated : 10 May 2022 04:51 PM

விரைவில் 3,000 காவலர்கள் தேர்வு: சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தகவல்

சென்னை: தமிழகத்தில் விரைவில் 3,000 காவலர்கள் தேர்வு செய்யப்படவுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார். இத்துடன் மேலும் மூன்று அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.

தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றது. இதற்கு பதிலளித்த துறையின் அமைச்சரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், "விரைவில் 3 ஆயிரம் புதிய காவலர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் முக்கிய அறிவிப்புகள் அடங்கிய புத்தகம் அச்சிடப்பட்ட பின்னர், என்னுடைய அலுவலகத்தில் என்னைச் சந்தித்த சில காவலர்கள், காவல்துறை அதிகாரிகள் சில கோரிக்கைகளை முன்வைத்தனர். அதனை மனதில் கொண்டு, அறிவிப்பு புத்தகத்தில் இல்லாவிட்டாலும்கூட, 3 புதிய அறிவிப்புகளை தற்போது நான் வெளியிடுகிறேன்.

> இரவுப் பணிக்குச் செல்லும் பணியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக, இரவு ரோந்துக்குச் செல்லும் அனைத்து காவல் ஆளிநர்கள் மற்றும் ஆய்வாளர் வரையிலான, அதிகாரிகளுக்கு சிறப்பு படியாக மாதம் ரூ.300 வழங்கப்படும்.

> ஏற்கெனவே காவல் ஆளிநர்களுக்கு வார விடுமுறை அளிக்கும் நடைமுறை பின்பற்றப்படுவதைத் தொடர்ந்து, தற்போது 15 நாட்களுக்கு ஒருமுறை உதவி ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு ஒருநாள் விடுப்பு வழங்கப்படும். இதனால், 10,508 பேர் பயனடைவார்கள்.

> இணையவழி சூதாட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள், தங்கள் உயிரையே மாய்த்துக் கொள்வதற்கான காரணங்களை அறியும் பொருட்டு மாநில குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை கண்காணிப்பாளர் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்படும் என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x