Published : 10 May 2022 11:52 AM
Last Updated : 10 May 2022 11:52 AM
சென்னை: வெளிநாடு வாழ் தமிழர்கள் வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது, திமுக சட்டமன்ற உறுப்பினர் கோ.வி. செழியன், "வெளிநாடு வாழ் தமிழர்கள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க ஒரு தெளிவான வரையறையை தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெறுவதற்கு அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா" என்று கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், "கரோனா காலத்தில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இல்லத்திற்தே சென்று வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு இருக்கும் இடத்தில் வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனவே வெளிநாடு வாழ் தமிழர்கள் வாக்குகளிக்கும் உரிமை தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெற துறை சார்பில் முதல்வரிடம் கோரிக்கை வைத்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT