Published : 08 Jun 2014 12:38 PM
Last Updated : 08 Jun 2014 12:38 PM
மாநகர பஸ்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்ததாக ஒரே நாளில் 652 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.91,150 அபராதத் தொகை வசூலிக் கப்பட்டுள்ளது.
சென்னை மாநகர போக்குவரத் துக் கழகம் சார்பில் 700-க்கும் அதிகமான வழித்தடங்களில் சுமார் 3,800 பஸ்கள் இயக்கப் பட்டு வருகின்றன. டீசல் விலை உயர்வால் ஏற்படும் இழப்பை சமாளிக்க மாநகர போக்குவரத்துக் கழகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, டிக்கெட் இல்லாமல் பஸ்ஸில் பயணம் செய்வோரைப் பிடிக்க கூடுதலாக சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மாதாந்திர, வாராந்திர சலுகை கட்டண பாஸ், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் சலுகை கட்டண பாஸ் ஆகியவற்றை நடத்துநர்கள் கட்டாயம் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் உத்தர விட்டுள்ளது.
சிறப்புக் குழுக்கள் மூலம் மாதந்தோறும் பல்வேறு இடங் களை தேர்வு செய்து திடீர் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் மாநகர போக்குவரத்துக் கழக அலுவலர்கள் 85 பேர் உள்பட மொத்தம் 285 பேர் 85 இடங்களில் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை நடத்தினர்.
இதில், 652 பேர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களி டமிருந்து ரூ.91,150 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுகையில், ‘‘மாதந்தோறும் 2 அல்லது 3 முறை சென்னையில் பல்வேறு இடங்களைத் தேர்வு செய்து பயணிகளிடம் திடீர் சோதனை நடத்துவோம்.
திடீர் சோதனை
கடந்த வெள்ளிக்கிழமை புரசைவாக்கம், சிம்சன், கிண்டி, கோயம்பேடு, பூந்தமல்லி, ஆவடி, அம்பத்தூர், தாம்பரம் உள்பட மொத்தம் 85 இடங்களில் திடீர் சோதனை நடத்தினோம்.
அதில், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த 652 பேர் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து அபராத தொகை வசூலித்ததுடன், எச்சரிக்கையும் செய்து அனுப்பினோம்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT