Published : 08 May 2016 09:31 AM
Last Updated : 08 May 2016 09:31 AM
எனக்கும் பதவி ஆசை உண்டு என்கிறார் அதிமுகவின் தேர்தல்நேர பிரச்சார பேச்சாளரும் திரைப்பட நடிகருமான செந்தில்.
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு வாக்கு கேட்டு நடிகர் செந்தில் தமிழகம் முழு வதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக நேற்று திருச்சிக்கு வந்த அவர் ‘தி இந்து’ வுக்கு அளித்த பேட்டி:
ஜெயலலிதாவுக்கு அனைத்து தரப்பினரிடமும் அமோக ஆதரவு உள்ளது. இதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், திமுகவினர் தங்களுக்கு வேண்டியவர்கள் மூலம் கருத்துகணிப்பு என்ற பெயரில், பொய்யான தகவல் களை கூறி மக்களை திசை திருப்ப முயற்சிக்கின்றனர். ஆனால், அது நடக்காது.
கட்சியில் சேர்ந்தது முதல் இன்றுவரை ஊர், ஊராகச் சென்று அதிமுகவுக்காக பிரச் சாரம் செய்து வருகிறேன். கட்சிப் பணியில் ஈடுபடுகிறேன். மற்ற வர்களைப் போலவே எனக்கும் பதவி ஆசை உண்டு. இல்லை என்று பொய் சொல்ல விரும்ப வில்லை. முதல்வராகப் பார்த்து, காலம் வரும்போது எனக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது.
தேமுதிக - தமாகா - மக்கள் நலக் கூட்டணியால் பெரிதாக எதையும் சாதிக்க முடியாது. அது நிலையான கூட்டணியும் அல்ல.
மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தில் அதிகமாக பொய் சொல்கிறார். அவர் இதற்கு முன் துணை முதல்வராக இருந்தபோது ஏன், நமக்கு நாமே பயணம் செல்ல வில்லை?
கவுண்டமணியும், நானும் தற்போது வரை நல்ல தொடர்பில் உள்ளோம். வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் அவருடன் இணைந்து நடிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
நலமுடன் இருக்கிறேன்
நடிகர் செந்தில் நேற்று முன்தினம் இரவு திருச்சியிலுள்ள தனியார் ஹோட்டலில் தங்கியிருந் தார். அப்போது, அவரது உடல் நலம் குறித்து சமூக வலைதளங் களில் தகவல் நேற்று பரவியது.
இதுகுறித்து அவர் கூறும் போது, “பிரச்சாரத்தில் திமுக, காங்கிரஸ் கட்சிகளின் ஊழல்கள் குறித்து அதிகளவில் பேசி வரு கிறேன். இதனால் என் மீதுள்ள வெறுப்பு காரணமாக என்னைப் பற்றி இதுபோன்ற தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். இது வருத்தமானது என்றாலும், திருஷ்டி கழிந்ததாக உணர்கிறேன். எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை. எனவே, 100 ஆண்டுகள் வாழ் வேன். இந்த வதந்தியால் தற் போது எனது கூட்டங்களில் முன் பைவிட கூடுதலான மக்கள் திரள்வார்கள்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT