Published : 10 May 2016 10:49 AM
Last Updated : 10 May 2016 10:49 AM
பாய்மரப் படகுகளில் சென்று மீன்பிடிக்கும் மிகப் பழமையான மீன்பிடி முறை ராமேசுவரம் தீவு பகுதிகளில் இன்றளவும் உயிர்ப்புடன் பின்பற்றப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்ட மீனவர் கள் தங்களின் வசதிக்கேற்ப விசைப் படகு, நாட்டுப் படகு மற்றும் பாய் மரப் படகு என மூன்று வகை யான படகுகளை மீன்பிடிக்க பயன்படுத்துகின்றனர். இதில் பாரம் பரியமிக்க பாய்மரப் படகுகள், தமிழ கத்திலேயே ராமேசுவரம் தீவு மீனவர்களால் இன்றளவும் பின்பற் றப்படுகிறது. ராமேசுவரம் தீவுப் பகுதிகளில் வத்தை என அழைக் கப்படுகின்ற பாய்மரப் படகில் இயந்திரம் இருப்பதில்லை. இப்படகை இயக்க காற்றை மட்டுமே பெருமளவில் மீனவர்கள் சார்ந்திருக்கின்றனர்.
பாய்மரப் படகினை உருவாக்க நாட்டுக் கருவேல மரப் பலகைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தப் பலகையின் அகலம் ஒரு அடியும், பலகையின் கனம் அரை அங்குல மும் இருக்கும். மேலும் பாய்மரப் படகின் நீளம் 14 அடி, உயரம் மூன்று அடியும், அகலம் மூன்றரை அடியும் கட்டுமானத்துக்கு பயன் படுத்தப்படுகிறது.
இதுகுறித்து பாம்பனைச் சேர்ந்த பாய்மரப் படகு மீனவர் மீராசா மரைக்காயர் கூறியதாவது: ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பாரம் பரியமாக பாய்மரப் படகுகளில் மீன்பிடிக்கும் முறை, தமிழக மீன வர்களால் பின்பற்றப்படுகிறது. இலங்கையில் உள்ள தமிழ் மீனவர் களும் இம்முறையை பாரம்பரிய மாக பின்பற்றி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், மரைக்காயர்பட்டினம், வேதாளை, கீழக்கரை, வாலிநோக்கம் ஆகிய கிராமங்களில் பாய்மரப் படகுகளில் மீனவர்கள் அரிதாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாய்மரப் படகு முன்பக்கமோ, பின்பக்கமோ செல்லாமல், காற்று வீசும் திசைக்கேற்ப, அலையின் திசைக்கேற்ப செல்லும். இதனால் பாய்மரப் படகுக்கு என்று தள்ளு வலையை பிரத் யேகமாக பயன்படுத்துகிறோம். தள்ளு வலையை பயன்படுத்தும் போது காற்றடிக்கும் திசைக்கேற்ப படகுடன் வலையும் பக்கவாட்டில் பயணிக்கும். இதனால் விசைப் படகைப் போன்று கடலின் சூழலி யல் மாற்றத்தை ஏற்படுத்தாது. தற்போது பாம்பன் பகுதியில் பாய் மரப் படகுகளில் இறால், நண்டு, ஊடகம், சூடை, காறல், திருக்கை போன்ற மீன்கள் பிடிபடுகின்றன.
விசைப்படகு மீனவர்களுக்கு டீசல் மானியம், தடைக்கால நிவா ரணம் போன்றவற்றை தமிழக அரசு வழங்கி வருகிறது. ஆனால் பாய்மரப் படகு மீனவர்களுக்கு அரசு எவ்விதமான சலுகையும் அளிப்பதில்லை. இதனால் ஒரு காலத்தில் முதன்மையான மீன்பிடி முறையாக இருந்த இத்தொழில், தற்போது நலிவடைந்து கொண்டே வருகிறது. பாய்மரப் படகு மீனவர் களின் வாழ்வாதாரத்தை மேம் படுத்த தமிழக அரசு பாய்மரப் படகுகள் மற்றும் தள்ளு வலை களுக்கு மானியம் வழங்க வேண் டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment