Published : 21 May 2016 09:01 AM
Last Updated : 21 May 2016 09:01 AM
சென்னை, பாட்டாளி மக்கள் கட்சி 1996-ல் தனித் துப் போட்டியிட்டு நான்கு தொகுதி களில் வென்றபோது அக்கட்சிக்கு 3.84 சதவீத வாக்குகள் கிடைத்தன. இத்தேர்தலில் மீண்டும் தனித்துப் போட்டியிட்டு ஒரு இடத்தில்கூட வெற்றி பெறாவிட்டாலும் 5.30 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி 1989-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
1991-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சிறு, சிறு கட்சிகளுடன் சேர்ந்து 165 இடங்களில் போட்டியிட்டு, ஒரே யொரு இடத்தில் வெற்றி பெற்றது. அத்தேர்தலில் பாமக வுக்கு 5.89 சதவீத வாக்குகள் கிடைத்தன.
1996-ல் நடைபெற்ற தேர்தலில் 116 இடங்களில் பாமக தனித்துப் போட்டியிட்டு நான்கு இடங்களில் வென்றது. அப்போது 3.84 சதவீத வாக்குகள் கிடைத்தன. 2001-ல் நடை பெற்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் 27 இடங்களில் போட்டி யிட்டு 20 இடங்களை பாமக கைப் பற்றியது. அப்போது 5.56 சதவீத வாக்குகள் கிடைத்தன.
2006-ம் ஆண்டு தேர்தலில் திமுகவுடன் அணி சேர்ந்த பாமக, 31 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் வென்றது. அப்போது 5.65 சதவீத வாக்குகள் கிடைத்தன. 2011-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்ட பாமக, 30 இடங்களில் போட்டியிட்டு 3 இடங்களில் வென்ற போது, 5.23 சதவீத வாக்குகள் கிடைத்தன.
இத்தேர்தலில், 234 தொகுதி களிலும் பாமகவினர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இரு தொகுதி களில் பாமக வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட் டன. இரண்டு வேட்பாளர்கள் கடைசி நேரத்தில் கட்சி மாறினர். தஞ்சை, அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.
மீதமுள்ள தொகுதிகளில் ஒன்றில்கூட பாமக வெற்றி பெற வில்லை. இருப்பினும் அக்கட்சிக்கு 5.30 சதவீத வாக்குகள் கிடைத் துள்ளன.
இந்த நிலையில், “இத்தேர்தலில் தோல்வியைத் தழுவினாலும் புதிய உத்வேகத்துடன் மக்கள் பணியைத் தொடர்வோம். எதிர்காலத்திலும் திமுக, அதிமுகவுடன் கூட்டணி வைக்கமாட்டோம்” என்று பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித் துள்ளார்.
பத்திரிகையாளர் கருத்து
இதுகுறித்து பத்திரிகையாளர் ஆழி செந்தில்நாதன் கூறுகையில், “டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஓராண்டுக்கு முன் தன்னை முதல்வர் வேட்பாளராக முன் னிறுத்தி பெரியளவில் வாக்கு சேக ரித்தார். ஆனால், பாமக ஏற்கெனவே வலுவாக இருக்கும் தொகுதிகளி லும் அவர்கள் மூன்றாவது இடம் தான் வந்திருக்கிறார்கள். முக்கிய தலைவர்கள் பலர் தோல்வியைத் தழுவியுள்ளனர்.
வலுவாக இல்லாத மேற்கு தமிழகம், தென்தமிழகம், மத் திய தமிழகம், சென்னை நகருக்கு உட்பட்ட தொகுதிகளில் பரவலாக கணிசமான வாக்குகள் வாங்கியிருந்தால், குறைந்தது அன்புமணி ராமதாஸ் முயற்சி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தத் தொடங்கி யிருக்கிறது என்று நம்பலாம். அப்படி இல்லையென்றால், 5.30 சதவீத வாக்குகளை வைத்துக்கொண்டு அடுத்தமுறை கூட்டணிக்கு பேரம் பேசலாம். அதைவிடுத்து மாற்று முதல்வர், நானே முதல்வர் என்று பேச முடியாது” என்றார்.
இரு தொகுதிகளில் பாமக வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இரண்டு வேட்பாளர்கள் கடைசி நேரத்தில் கட்சி மாறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT