Published : 11 May 2016 09:16 AM
Last Updated : 11 May 2016 09:16 AM
மாவட்டம் கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் 1977-ல் இருந்து 2001-ம் ஆண்டு வரை நடைபெற்ற 7 தேர்தல்களில், திமுக சார்பில் போட்டியிட்டு 4 முறை வெற்றி பெற்றவர் பெ.சு.திருவேங்கடம். 81 வயதான இவர், சற்றும் சளைக் காமல், இப்போதும் திமுகவுக்கு வாக்கு சேகரிக்க புறப்பட்டு சென்றுவிடுகிறார். தன்னுடைய தேர்தல் பணி மற்றும் அனுபவம் குறித்து அவர் கூறியதாவது:
1952-ல் நடைபெற்ற தேர்தலில் திமுக போட்டியிடாததால், காங்கிரஸுக்கு ஆதரவாக, பள்ளிப் பருவத்திலேயே மாட்டு வண்டியில் சென்று பிரச்சாரம் செய்தேன். காங்கிரஸ் பிரச்சாரத்தில் அனைத்து கிராமங்களுக்கும் வேட்பாளர் செல்லமாட்டார். செல்வாக்கு மிக்கவர்கள் உள்ள கிராமத்துக்கு மட்டுமே செல்வார்கள்.
1957-ல் நடைபெற்ற தேர்தலில் திமுக தேர்தல் அரசியலுக்கு வந்தது. அப்போது, நாங்கள் வகுத்த திட்டமே, அனைத்து கிராமங்களுக்கும் வேட்பாளர் நேரடியாக சென்று பிரச்சாரம் செய்வதுதான். ஐந்து மிதிவண்டிகளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, 10 பேர் பயணம் செய்து கிராமம் கிராமமாகச் சென்று பிரச்சாரம் செய்வோம். அப்போது மறக்காமல் மிதிவண்டிகளுக்கு காற்றடிக்கும் பம்ப்பை கூடவே கொண்டு செல்வோம். பஞ்சர் ஒட்டும் பொருட்களையும் வைத்திருப்போம்.
1957-ல் திமுக தோல்வியை தழுவினாலும், கணிசமான வாக்குகளைப் பெற்று தடம் பதிக்க தொடங்கியது. அடுத்தடுத்து நடைபெற்ற தேர்தல்களில் வீதி வீதியாகவும், வீடு வீடாகவும் சென்று பிரச்சாரம் செய்த எங்களை மக்கள் அன்போடு வரவேற்றனர். காலை சிற்றுண்டி, மதிய உணவு எல்லாம் கட்சிக்காரர்கள் வீட்டில்தான்.
பிரச்சாரத்துக்கு 100 பேர் சென் றாலும், கிராம மக்களே இணைந்து உணவு தயாரித்து வழங்குவார்கள். இரவு கடந்துவிட்டால், கட்சிக்காரர் கள் வீட்டில் தங்கிவிடுவோம். தேர்தல் ஆணையம் கெடுபிடிகள் எல்லாம் கிடையாது. மக்களே ஆர்வமாக சென்று வாக்களித்தார்கள்.
அப்போது எல்லாம் பொது தேவை களைதான் மக்கள் முன் வைப்பார் கள். பணம் உட்பட எதையும் மக்கள் எதிர்பார்க்கமாட்டார்கள். மக்களோடு மக்களாக நெருங்கி பழகுவோம். நாங்கள் வெற்றி பெற்று வந்த பிறகு, கிராமம் கிராம மாக சென்று மக்களை சந்தித்து அவர்களது தேவைகளை கேட்ட றிந்து செய்து கொடுத்துள்ளோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT