Published : 09 May 2016 03:03 PM
Last Updated : 09 May 2016 03:03 PM
திண்டுக்கல் சட்டப் பேரவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரின் எளிமையான பிரச்சாரம் மக்களை கவர்ந்துள்ளது.
திண்டுக்கல் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் என்.பாண்டி போட்டியிடுகிறார். கட்சியின் முழு நேர ஊழியரான இவர், மாவட்டச் செயலா ளராக உள்ளார். இவர் பொது வாழ்க்கையில் இருப்பதால் திண்டுக்கல் நகர மக்களுக்கு அறிமுகமானவராகவும் உள்ளார். மக்கள் பிரச்சினைகளில் முன்னின்று போராட்டம் நடத்தி வருகிறார்.
இவரது எளிமையான பிரச்சாரம் மக்களை கவர்ந்துள்ளது. காலை 6 மணிக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு தனக்கு அறிமுக மானவர்களின் வீடுகளுக்குச் செல்கிறார். உடன் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் நிர்வாகிகள் இருவர் செல்கின்றனர். இவர்கள் தெரிந்தவர்களின் வீடுகளுக்குச் சென்று குடும்பத்தினருடன் ஐந்து நிமிடங்கள் பேசுகிறார். சில நேரங்களில் கட்சி நிர்வாகிகள் வீட்டிற்கு வெளியில் நின்று விடுகின்றனர்.
காலை 8 மணிக்குள் குறைந்தது இருபதுக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு சென்று தெரிந்தவர்களை சந்திக்கிறார். வீட்டிற்குள் சென்று பிரச்சாரம் செய்யும் வேட்பாளர் இவர் ஒருவர் தான். காலை 8 மணிக்கு மேல் தொண்டர்களுடன் தனது எளிமையான பிரச்சாரத்தை தொடங்குகிறார். பிரச்சாரத்துக்கு இடையில் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் சாலையோர கடையில் அமர்ந்து டீ குடிக்கிறார். தேர்தலுக்கு குறுகிய நாட்களே உள்ளதால் பகல் நேரத்தில் ஓய்வும் கிடையாது. மதிய உணவாக கட்சியினர் கொடுக்கும் பொட்டல உணவை தெரு பகுதிகளிலேயே அமர்ந்து சாப்பிடுகிறார்.
இவரது எளிமையான பிரச்சாரம் திண்டுக்கல் மக்களை கவர்ந்து ள்ளது. திண்டு க்கல் எம்எல்ஏவாக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பாலபாரதி உடன் சேர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தியதால் மக்களுக்கு நன்கு அறிமுகமானவராகவும் உள்ளார். உள்ளூர் பிரச்சி னைக்கு முக்கியத்துவம் கொடு ப்பவர், எளிமையானவர், பிரச்சா ரத்திலேயே மக்களை எளிதில் அணுகுகிறார் என்பதால் இவரது பிரச்சாரம் மக்களை கவர்ந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT