Published : 05 May 2022 03:48 PM
Last Updated : 05 May 2022 03:48 PM
சென்னை: கடந்த சில ஆண்டுகளாக அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்து விபத்துகள் குறைந்துள்ளதாக போக்குவரத்துத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று போக்குவரத்துத்துறை, இயக்கூர்திகள் சட்டங்கள் - நிருவாகம், சுற்றுலாத்துறை, கலை மற்றும் பண்பாடு அருங்காட்சியகங்கள் தொல்லியல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றது. இதற்கு துறையின் அமைச்சர்கள் எஸ்.எஸ்.சிவசங்கர், மதிவேந்தன், தங்கம் தென்னரசு ஆகியோர் பதிலளித்து, புதிய அறிவிப்புகளை வெளியிட்டனர். முன்னதாக கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர்.
போக்குவரத்துத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில், சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவல்கள்:
> நாட்டில் அதிக எண்ணிக்கையிலான மோட்டார் வாகனங்களைக் கொண்ட மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகும். கடந்த 2022 மார்ச் 3-ம் தேதி வரை, தமிழகத்தில் 3.24 கோடி மோட்டார் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
> ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் கூடுதலாக 20 லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. நகரமயமாக்குதலின் காரணமாக வாகனங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்துள்ளது.
> தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் ஒரு நாளைக்கு 73 லட்சம் கி.மீட்டருக்கு சாலைகளில் பேருந்துகளை இயக்கி, மாநிலத்தின் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
> கடந்த சில ஆண்டுகளாக அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளின் விபத்துகள் குறைந்துள்ளன.
> கடந்த 2019-2020 (கரோனாவுக்கு முன்) 19,290 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் உயிரிழப்பு ஏற்படுத்திய விபத்துகள் 867, உயிரிழப்புகளின் எண்ணிக்கை 969.
> கடந்த 2020-2021 (கரோனா காலத்தில்) 19,290 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் உயிரிழப்பு ஏற்படுத்திய விபத்துகள் 343, உயிரிழப்புகளின் எண்ணிக்கை 381.
> கடந்த 2021-20122 (கரோனா காலத்தில்) 19,290 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் உயிரிழப்பு ஏற்படுத்திய விபத்துகள் 705, உயிரிழப்புகளின் எண்ணிக்கை 762. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT