Last Updated : 09 May, 2016 12:14 PM

 

Published : 09 May 2016 12:14 PM
Last Updated : 09 May 2016 12:14 PM

என்னாத்துக்கு நோட்டு?- யுகபாரதி வரிகளில் பிரபுதேவா அசத்தல் கானா!

வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை விற்பனை செய்யாமல் நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், 'என்னாத்துக்கு நோட்டு' என்று தொடங்கும் பாடல் ஒன்றை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. | இணைப்பு கீழே |

தேதி அறிவித்த நாள் முதலே, அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது. அந்த அளவுக்கு தமிழகத்தில் ஓட்டுக்கு நோட்டு பெரும் சவாலாக இருக்கிறது. தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் வாக்காளர்கள் தங்கள் உரிமை காசுக்காக இழந்துவிடக்கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்தும் வகையில் நடிகர் பிரபுதேவாவை வைத்து தேர்தல் ஆணையம் ஒரு விழிப்புணர்வு வீடியோவை உருவாக்கியுள்ளது.

கானா பாணியில் இந்தப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. #TN100percent என்ற ஹேஷ்டேகின் கீழ் இந்தப் பாடல் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது.

என்னாத்துக்கு நோட்டு.. எனக்கு ஒரு டவுட்டு என்ற இந்தப் பாடலை பிரபுதேவா தனது சொந்தக் குரலில் பாடியிருக்கிறார். கவிஞர் யுகபாரதி பாடலை எழுதியிருக்கிறார்.

1 நிமிடம் 53 விநாடிகள் நீடிக்கும் இந்த வீடியோவின் முடிவில் வாக்காளர்கள் 'என் வாக்கு விற்பனைக்கு அல்ல' 'நேர்மையாக வாக்களிப்போம்' போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி திரையில் தோன்றுகின்றனர்.

இதற்கு முன்னதாகவும் தேர்தல் ஆணையம் நேர்மையாக வாக்களிப்பதை வலியுறுத்தும் விழிப்புணர்வு பாடல்களை உருவாக்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.



x