Published : 02 Jun 2014 08:34 AM
Last Updated : 02 Jun 2014 08:34 AM

மாணவர்களுக்கு அடுத்த வாரத்தில் புதிய பஸ் பாஸ் விநியோகம்: தற்போதுள்ள பாஸ் ஆகஸ்ட் வரை செல்லும்

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு அடுத்த வாரம் முதல் புதிய பஸ் பாஸ் விநியோகம் செய்யப்படும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆகஸ்ட் மாதம் வரை தற்போதுள்ள பாஸ்கள் செல்லும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

தமிழகத்தில் கோடை விடு முறைக்காக மூடப்பட்டிருந்த பள்ளிகள் அனைத்தும் திங்கள் கிழமை முதல் திறக்கப்படுகிறது. கோடை விடுமுறைக்காக ஊருக்குச் சென்றுள்ள பலரும் ஊர் திரும்பி வருகின்றனர். இதனால் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களிலும், கோயம்பேடு பஸ் நிலையத்திலும் கூட்டம் அலைமோதியது. இந்த ஆண்டு பள்ளிகள் திறக்கும் போது, மாணவர்களுக்கு உடனடியாக இலவச பஸ் பாஸ் வழங்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

மே மாதம் 12-ம் தேதி முதல் இலவச பஸ் பாஸுக்கான விண் ணப்பங்கள் வழங்கப்பட்டு வரு கின்றன. தமிழகத்தில் உள்ள 7 அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் அந்தந்த எல்லைக்குட்பட்ட மாவட்ட பகுதி பள்ளிகளுக்கு விண் ணப்பங்கள் அளிக்கப்பட்டு வரு கின்றன. இந்த கல்வி ஆண்டில் மொத்தம் 27 லட்சம் பஸ் பாஸ்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக போக்கு வரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், “ஆண்டுதோறும் முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.

மே மாதம் 12-ம் தேதி முதல் இலவச பஸ் பாஸ்களுக்கான விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறந்த வுடன் மாணவர்கள் வந்து அவர் களின் பெயர், முகவரி, வகுப்பு உள் ளிட்ட விபரங்களை பூர்த்தி செய்து, புகைப்படங்களை பதிவு செய்து விண்ணப்பங்களை வழங்க வேண்டும். இந்த பணிகள் முடிய ஒரு வார காலமாகும். மேலும், வரும் ஆகஸ்ட் மாதம் வரையில் தற்போதுள்ள பழைய பஸ் பாஸ் செல்லும். இதற்கான உத்தரவு அனைத்து போக்குவரத்து கழகங்களுக்கும் அனுப்பப்பட் டுள்ளது’’என்றனர்.

90,000 விண்ணப்பங்கள் விநியோகம்

சென்னை மாநகர போக்குவரத்து கழக (எம்டிசி) எல்லைக்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பஸ் பாஸூக்கான விண்ணப்பங் கள் பல்லவன் இல்லத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

இணையதளத்திலும் (http://www.mtcbus.org/) விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரையில் சுமார் 500க்கும் மேற்பட்ட பள்ளிகள் நிர்வாகிகள் நேரில் வந்து 90 ஆயிரம் விண்ணப்பங்களை பெற்றுச் சென்றுள்ளனர்.

மேலும், சுமார் 1.3 லட்சம் விண்ணப்பங்களை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து இருக்கலாம் என்று மாநகர போக்குவரத்து அதிகாரிகள் கூறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x