Published : 04 May 2022 11:51 AM
Last Updated : 04 May 2022 11:51 AM
சென்னை: தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை (மே 5) தொடங்கி 28 ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இத்தேர்வை தமிழகம், புதுச்சேரியில் இருந்து 8.60 லட்சம் பேர் எழுத உள்ளனர். இதில் 28,353 தனித் தேர்வர்கள், 3,638 மாற்றுத் திறனாளிகள், 6 மூன்றாம் பாலினத்தவர், 73 சிறை கைதிகள் ஆகியோரும் அடங்குவர். இந்நிலையில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
நாளை பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் நாளை மறுநாள் பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகளை எழுதவுள்ள மாணவர்களுக்கு வாழ்த்துகள்!
நீங்கள் கற்றதை மதிப்பிடுபவைதான் தேர்வுகளே தவிர, உங்களை மதிப்பிடுவது அல்ல!
நம்பிக்கையோடு தேர்வை எதிர்கொண்டு வெல்க!— M.K.Stalin (@mkstalin) May 4, 2022
இது தொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நாளை பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் நாளை மறுநாள் பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகளை எழுதவுள்ள மாணவர்களுக்கு வாழ்த்துகள்! நீங்கள் கற்றதை மதிப்பிடுபவைதான் தேர்வுகளே தவிர, உங்களை மதிப்பிடுவது அல்ல. நம்பிக்கையோடு தேர்வை எதிர்கொண்டு வெல்க!" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT