Published : 03 May 2022 12:23 PM
Last Updated : 03 May 2022 12:23 PM
சென்னை: சென்னையில் கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி மெட்ரோ ரயில் பணிகளுக்காக 133 மரங்கள் வெட்டப்படவுள்ளன. இதற்குப் பதிலாக 1,596 மரங்கள் நட கடலோர ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 4-வது வழித்தடம் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை செயல்படுத்தப்படவுள்ளது. இதன்படி 26.1 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்தத் தடத்தில் 27 ரயில் நிலையங்கள் அமைய உள்ளன. இதில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் பாலம் வரை உள்ள வழித்தடத்தில் 9 சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களும், பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரையிலான உயர்மட்ட வழித்தடத்தில் 18 ரயில் நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன.
இந்த 4-வது வழித்தடத்தின் சென்னையின் முக்கிய பகுதியான மெரினா கடற்கரையில் இருந்து மயிலாப்பூர், நந்தனம், தி.நகர், கோடம்பாக்கம், வடபழனி, போரூர், அய்யப்பந்தாங்கல், காட்டுப்பாக்கம் ஆகிய பகுதிகளை இணைத்து பூந்தமல்லி சென்றடையும்.
இந்தப் பணிகளுக்கு கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இந்த அனுமதியின் படி இந்த பணிகளுக்காக மொத்தம் 133 மரங்கள் வெட்டப்படவுள்ளன. இதற்குப் பதிலாக 12 மடங்கு அதிகமாக 1,596 மரங்களை நட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. முழுவதும் அனைத்து சுற்றுச்சூழல் விதிகளின் படி கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT