Published : 03 May 2022 06:10 AM
Last Updated : 03 May 2022 06:10 AM
கொடைக்கானல்: கொடைக்கானலில் மே மாத இறுதி வாரத்தில் கோடை விழா நடைபெறவுள்ள நிலையில் அதற் கான முன்னேற்பாடுகளை பல்வேறு துறையினர் மேற்கொண்டு வரு கின்றனர்.
தோட்டக்கலைத்துறை சார்பில் பூங்கா போட்டியில் பங்கேற்க திண்டுக்கல் மாவட்ட மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பல்வேறு போட்டிகளை நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஆண்டுதோறும் நடைபெறும் கோடைவிழா, மலர் கண்காட்சி கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது. கரோனா கட்டுப்பாடுகள் தளர்வுக்கு பிறகு இந்த ஆண்டு கோடை விழாவை நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து, அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.
பத்து நாட்கள் நடைபெறும் கோடை விழாவில் சுற்றுலாத்துறை, தோட்டக்கலைத்துறை, நகராட்சி நிர்வாகம், விளையாட்டுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் போட்டிகள் நடைபெறும். இந்த ஆண்டு அந்தந்த துறைகள் சார்ந்து போட்டிகளை நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
விளையாட்டுத்துறை சார்பில் கால்பந்து, வாலிபால், ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
இதில் தோட்டக்கலைத்துறை சார்பில் பிரையண்ட் பூங்காவில் நடைபெறும் மலர் கண்காட்சியை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள சிறந்த பூங்காக்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப் படவுள்ளன.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் பாண்டியராஜன் கூறுகையில், பூங்கா போட்டியில் கலந்துகொள்ள பிரையண்ட் பூங்காவில் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பூங்கா உரிமையாளர்கள் விண் ணப்பங்களை பெற்று உரிய கட்டணம் செலுத்தி அவற்றை பூர்த்தி செய்து மே 10-ம் தேதி மாலை 5 மணிக்குள் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் வழங்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9790273216 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT