Published : 02 May 2022 12:38 PM
Last Updated : 02 May 2022 12:38 PM

கோடை கால நோய்கள் | அவசர உதவிக்கு 104-ஐ தொடர்பு கொள்ளலாம் - சுகதாரத்துறை அறிவிப்பு

சென்னை: கோடை கால நோய்கள் தொடர்பான அவரச உதவிக்கு 104 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் வெப்ப அலை வீசி வரும் நிலையில் கோடை காலத்தில் செய்ய வேண்டிய நடவடிக்கை தொடர்பாக பல்வேறு மாநில அரசுகள் வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி வருகின்றன. இதன்படி தமிழக அரசின் பொதுச் சுகாதாரத்துறையும் கோடை காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது.

என்ன செய்ய வேண்டும்?

*அதிக அளவு தண்ணீர் அருந்த வேண்டும்.

*பயணத்தின் போது தண்ணீரை எடுத்துச் செல்ல வேண்டும்.

*ஓஆர்எஸ், எலுமிச்சைச் சாறு, இளநீர், பழச்சாறு அருந்த வேண்டும்.

*முடிந்தவரை வீட்டுக்குள் இருக்க வேண்டும்.

*காற்றோட்டம் உள்ள குளிர்ந்த இடத்தில் இருக்க வேண்டும்.

*பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.

*வெளியே செல்லும்போது காலணி அணிய வேண்டும்.

*மதிய நேரத்தில் வெளியே செல்லும்போது குடை கொண்டு செல்ல வேண்டும்.

என்ன செய்யக் கூடாது?

*காலை 11 மணி முதல் 3.30 மணி வரை வெளியில் சுற்றக் கூடாது.

*வெறுங்காலுடன் நடக்க கூடாது.

*மதிய வேளையில் வீட்டின் மொட்டை மாடியில் விளையாட கூடாது.

*செயற்கை குளிர்பானங்கள், மது, புகைபிடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

சிகிச்சைக்கு...

*உடல் வெப்பம் மற்றும் மனக் குழப்பத்தில் உள்ளவர்களுக்கு உதவுங்கள்.

*மருத்துவ உதவிக்கு 108 அவரச ஊர்தி சேவையை பயன்படுத்தவும்.

*அவரச உதவிக்கு 104 என்ற எண்னை அழைக்கவும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x