Published : 01 May 2022 06:30 AM
Last Updated : 01 May 2022 06:30 AM
பள்ளிக்கல்வித் துறை முதன்மைச்செயலர் காகர்லா உஷா, அனைத்து மாவட்டக் கருவூலக அலுவலகங்களுக்கும் அனுப்பிய கடிதம்:
2021-22-ம் கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் மாணவர்சேர்க்கையானது உயர்ந்துள்ளதால், கூடுதல் ஆசிரியர்கள் தேவையுள்ள பள்ளிகள் அதிகம் கண்டறியப்பட்டன. இதையடுத்து முன்னுரிமை அடிப்படையில் 9 வடமாவட்டங்களுக்கு 3,000 பணியிடங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு, ஆசிரியர்கள் கலந்தாய்வு மூலம் பணிநிரவல் செய்யப்பட்டனர்.
தற்போது இவர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான அனுமதியை தருமாறு பள்ளிக்கல்வித் துறை ஆணையர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுசார்ந்த கருத்துரு தமிழக அரசின்பரிசீலனையில் உள்ளது. இதையடுத்து பணிநிரவலான ஆசிரியர்களுக்கும் மார்ச் மற்றும் ஏப்ரல்மாத ஊதியம் வழங்குவதற்கான கொடுப்பாணை அளிக்கப்படுகிறது.
எனவே, சார்ந்த அலுவலர்கள் சம்பளப் பட்டியல் தாக்கல் செய்யும்போது, அதை ஏற்று ஊதியம் வழங்க வேண்டும். இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது. இதற்கிடையேகடந்த 2 மாதங்களாக ஆசிரியர்கள் ஊதியம் பெறாமல் இருந்ததுகுறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment