Published : 01 May 2022 04:10 AM
Last Updated : 01 May 2022 04:10 AM
நிலத்தின் வழிகாட்டு மதிப்பை சீரமைக்கக் குழு அமைக்கப் படுவதால், இதில் உள்ள குறை களை சரி செய்து உண்மை யான சொத்து மதிப்பீட்டின் கீழ் ஆவணங்களை பதிவு செய்யும் நடைமுறை விரைவில் அமலுக்கு வரும் என பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
தமிழகத்தில் சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு செய்யும் நடைமுறை நேற்று அமலுக்கு வந்தது. இதையொட்டி மதுரை ஒத்தக் கடையில் உள்ள ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை உரிமைதாரர்களிடம் அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது:
தமிழகத்தில் முதல் கட்டமாக 100 அலுவலகங்களில் சனிக்கிழமை களில் பதிவுப்பணி நடைபெறும். பல்வேறு காரணங்களால் அவசரமாக பதிவு செய்ய விரும்புவோருக்காக தக்கல் முறையிலான பதிவும் நேற்று தொடங்கப்பட்டுள்ளது.
போலி பத்திரங்களை ஒழிக்க கொண்டு வரப்பட்ட சட்டத்தை அமல்படுத்த ஒப்புதல் கேட்கும் கோப்பு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த சட்டம் அமலுக்கு வந்ததும் போலியாக பதிவான ஆவணங்களின் பதிவு ரத்து செய்யப்படும்.
சார்பதிவாளர் அலுவலகங் களின் பதிவு எல்லை அந்தந்த மாவட்டம், தாலுகாக்களுக்குள் இருக்கும் வகையில் சீரமைக்க அனுமதிக்கும் மசோதா சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள் ளது.
நிலத்தின் வழிகாட்டி மதிப்பீடு ஒரே சீராக இல்லை. இதை சரி செய்ய குழு அமைக்கப்படுகிறது. குறைகளை சரி செய்த பின்பு உண்மையான சொத்து மதிப்பீட்டின் கீழ் ஆவணங்களை பதிவு செய்யும் நடைமுறை அமலுக்கு வரும். 10 ஆயிரம் பத்திரப்பதிவு எழுத்தர்கள் விரை வில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
பதிவுத் துறை டிஐஜி ஜெகநாதன், ஏஐஜி ரவீந்திரநாத், வெங்கடேசன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT