Published : 30 Apr 2022 11:26 AM
Last Updated : 30 Apr 2022 11:26 AM

வளர்ச்சி என்பதை அனைவருக்கும் சாத்தியப்படுத்துவதே 'திராவிட மாடல்' - முதல்வர் ஸ்டாலின் 

தேனி: வளர்ச்சி என்பதை அனைவருக்கும் சாத்தியப்படுத்துவதே திராவிட மாடல் ஆட்சி. ஒவ்வொரு தனிமனிதனுடைய தேவையையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதுதான் தமிழக அரசினுடைய இலக்கு. அந்த இலக்கை நோக்கிய பயணம்தான் திராவிட மாடல் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தேனி மாவட்டத்தில் ரூ.74.21 கோடி மதிப்பீட்டில் 102 புதிய திட்டப் பணிகளையும், ரூ.300 கோடி மதிப்பில் நடந்து முடிந்த திட்டப் பணிகளையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நலத்திட்ட உதவிகளை வழங்கி தமிழக முதல்வர் பேசியது: "வளர்ச்சி என்பதை அனைவருக்கும் சாத்தியப்படுத்துவதே திராவிட மாடல். அதுதான் என்னுயை மாடல், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுடைய மாடல். அதுதான் திராவிட மாடல். அரசு திட்டங்கள் அனைவருக்கும் போய் சேரக்கூடிய வகையில், ஒவ்வொரு திட்டத்தினையும் பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கிறோம்.

ஒவ்வொரு தனிமனிதனுடைய தேவையையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதுதான் இந்த அரசினுடைய இலக்கு. அந்த இலக்கை நோக்கிய பயணம்தான் திராவிட மாடல். திமுக பொறுப்பேற்று இன்னும் ஓராண்டு காலம் முடியவில்லை. இன்னும் ஒரு வாரம் காலம் இருக்கிறது. வரும் மே 7-ம் தேதிதான் ஓராண்டு நிறைவடைகிறது. இந்த ஓராண்டு காலத்தில், 5 வருடம் இல்லை 10 வருடம் ஆட்சியிலிருந்தால் செய்திருக்க வேண்டிய சாதனைகளை இந்த அரசு ஒரே ஆண்டு காலத்தில் செய்திருக்கிறது.

கரோனா என்ற கொடிய நோய்க்கு ஓரளவுக்கு முற்றுப்புள்ளி வைத்தோம். தடுப்பூசி செலுத்துவதை மிகப்பெரிய மக்கள் இயக்கமாகவே மாற்றினோம். இதுவரை தமிழகத்தில், 91 விழுக்காடு பேருக்கு முதல்தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி செய்யப்பட்டிருக்கிறது. ஆட்சிக்கு வந்தவுடன் கரோனாவுக்கு நிவாரண நிதியாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டது. ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் யாரும் குறைக்காத சமயத்தில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டது.

இலங்கையிலிருந்து அடைக்கலம் தேடி வந்தவர்களுக்கு ரூ.317 கோடி மதிப்பிலான திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது" என்றார்.

முன்னதாக, தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம், அரப்படித்தேவன்பட்டியில் உள்ள நியாய விலைக் கடையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்து மக்களிடம் கேட்டறிந்தார். மேலும், அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு விவரம் மற்றும் வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT   ( 27 Comments )
  • M
    Murthy

    லாக் அப் மரணங்களை பற்றி கண்டுகொள்ளாமல் இருப்பதும் திராவிட மாடலா? அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்; ஆனால் திமுக தலைவராக முடியாது...இதுவும் திராவிட மாடல் தானே?

      M
      Murthy

      ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்தில் லாக் அப் மரணங்களுக்காக எந்த அதிகாரியாவது தண்டிக்கப்பட்டுள்ளாரா? கடந்த ஆட்சியில் நடந்ததற்கு கைது செய்து சிறையில்கூட அடைத்தார்கள்....அப்போது இன்றய முதல்வர் அவர்கள் சொன்னதை கேட்டுப்பாருங்கள் புரியும்.

      2

      1

      K
      Kumar

      பிறகு எதற்கு நண்பரே பிஜேபி யில் உறுப்பினரல்லாத தாங்கள் அக்கட்சியை குறை கூறுவது? தாங்கள் கூறுவது சரியா? ஒரு அரசியல் கட்சியின் மீது விமர்சனம் வைப்பது சாதாரண நடைமுறை. கட்சியின் தலைமையை பற்றி மட்டும் கேள்வி எழுப்பினால் எதற்காக இவ்வளவு கோபம். அப்படியென்றால் அது மிகப்பெரும் தவறு நடக்கிறது தானே?

      1

      3

      S
      Sooriyan

      லாக் அப் மரணங்களைப்பற்றி விசாரணைகள் நடைபெற்று வருகின்றன;திமுகவில் அனைத்து சாதியை சேர்ந்த தலைவர்கள் இருக்கிறார்கள்;அமைச்சர்களாக,நாடாளுமன்ற உறுப்பினர்களாக ,சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள்;சட்ட மன்ற துணை சபாநாயகர்களாக ,துணை பொது செயலாளர்களாக,முன்னாளில் ஒன்றிய அமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள்,நண்பர் அனைத்து சாதியினருக்காகவும் பரிந்து பேசவில்லை;ஒரு குடும்பத்தை சேர்ந்தவர் தலைவராக இருப்பது மட்டுமே அவருக்கு உறுத்துகிறது;அதோடு திமுக தலைவராகவேண்டும் என்று திமுகவினர்தான் ஆசைப்படவேண்டும் ;திமுகவை கட்டோடு வெறுப்பவர்கள் உள்கட்சி விஷயத்தில் ஏன் மூக்கை நுழைக்கவேண்டும்?

      4

      9

  • A
    Anand Kumar

    எல்லோர்க்கும் எல்லாமும் என பேசும் திராவிடம் ஊழல் என்பதை மட்டும் தந்திரமாக மறைத்து விடுகிறது. எங்கள் தெருவில் வீடு கட்டுவதற்கு மூன்று லட்ஷம் கேட்க்கிறார் எங்கள் தெரு கவுன்சிலர். தனது குழந்தையை தனியே வளர்க்க கஷ்டப்படும் எங்கள் அபார்ட்மெண்ட் PWD பெண் ஊழியர் தனது பனி மாறுதலுக்கு ளகரங்களில் பணம் கேட்கிறார்கள். அவர் அழுகிறார். இன்னொருவர் அபார்ட்மெண்ட் புக் பண்ணி உள்ளார். அதற்கு போன ஆட்சியில் கொடுத்தது அவர்களுக்கு எங்களுக்கு இன்னும் வர வேண்டியது வர வில்லை என no clearance certificate தர மறுக்கிறார்கள். இது தான் திராவிட மாடல்? குடும்ப ஆட்சியையும் திராவிடத்தில் சேர்த்து கொள்ளலாமா? மாற்று குடும்பத்தில் இருந்து தலைவரை தேடாததை எப்படி எல்லோருக்கும் எல்லாமும் என்று எடுத்து கொள்வது? வடக்கே ஆயிரம் குறை காணும் நாம் நம்மிடம் உள்ள குறைகளை களைவது எப்போது?

      N
      Narasiman

      ஆனந்த் குமார் கேட்ட கேள்வி சரியானது. ஆனால் அது திசை திருப்பப்பட்டு, எஸ் பேங்க் என்று மாறி விட்டது. நண்பர் சூரியனின் பதிலை எதிர் பார்ப்போம்

      3

      5

      D
      DHUSMANDHA SINGA ROY

      நீங்கள் சொன்ன YES BANK 9 லட்சம் கோடி இழப்பு அதை ஏன் SBI யிடம் கோர்த்து விடணும் / மதவாத பவுத்த பிக்குகளால் தான் இலங்கைக்கு இந்த அகோர நிலைமை...மதவாத ங்களால் இந்தியாவுக்கு இப்படி நிலைமை வந்துவிட கூடாது!!...

      6

      1

      C
      Chandran Wilson

      YES BANK - இந்த வருடம் லாபம் காட்டியது உண்மையே - அதன் பின்னணி அறிந்து பதிவிடப்பட்டிருக்கப்பட வேண்டும் - 2020 ஆண்டு இழப்பு -ரூ 16418 கோடி நஷ்டம், 2021 ஆம் ஆண்டு ரூ 3462 கோடி - விரிவாக விவாதிக்க பட வேண்டியது - STATE BANK OF INDIA INVEST பண்ணி, அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது - பல தவறுகள் நடந்திருக்கிறது - திவான் ஹௌசிங் பைனான்ஸ் கார்பொரேஷன் (DHFL ) உடன் LINK பண்ணி பாருங்கள் - அதன் இழப்பு சுமார் 29700 கோடி- JUST ACCOUNTED - இழப்பில் இருந்து இன்னும் மீண்டு வரவில்லை - FURTHER LOSS IS RESTRICTED - .

      5

      3

      A
      Anand Kumar

      எஸ் பேங்க் பற்றி தமக்கு என்ன தெரியும். எப்படி போதம் பொதுவாக பேசுவதை நிறுத்துங்கள். இந்த வருடம் மட்டும் எஸ் பாங்கிங் லாபம் 1066 கோடி. தங்களிடம் இல்லாத நேர்மையை வெளியே தேடாதீர்.

      1

      3

      A
      Anand Kumar

      இனியும் என்னை நான் திருத்தி கொள்ள மாட்டேன். கேட்டால் மோடி வாங்க வில்லையா என எதிர் கேள்வி? மோடி ஆடசி சரி என்று கூறுபவரிடம் உங்களது கருத்துக்களை கூறுங்கள். உங்கள் ஆடசியில் ஊழல் பெருக்கெடுத்து உள்ளதென்றால் அதற்கு பதில் சொல்லுங்கள். அதை விடுத்தது இன்னும் எத்தனை நாளைக்கு இந்த சமாளிப்பு அரசியல்?

      3

      3

      D
      DHUSMANDHA SINGA ROY

      அதாவது உமக்கு வடக்கே லக்ஸ் குறை இருந்தாலும் TN சேயும் குறை பெரிசா , சரி மோடி இப்போ காஸ்மீர் நலத்திட்டம் ௨௦௦௦௦ கோடியில்/ UP யில் 36000 கோடி இதை யாருக்கு கொடுத்து எதுவுமே வாங்க வில்லையா என்ன , சரி நீங்கள் சொல்லும் ஊழல் இதை சொல்லி தானே மோடி ஆட்சி மாற்றினார் எங்கே நிரூபித்தார் சொல்லுங்கள் , ஊழல் ஊழல் என்று சொல்லும் காங்கிரஸ் இருக்கும்போது பெட்ரோல் 60 , வேலைவாய்ப்புக்கு பஞ்சமில்லை என் தேசிய சொத்துக்கள் அரசிடம் , ஆனால் ஒருத்தர் நேர்மை நேர்மை என்று சொல்லி petrol DESEL GAS என்று தினக்கொள்ளை அடித்து சேர்த்தது ௨௬ லட்சம் கோடி / GST என்று புடுங்கியது ஆண்டுக்கு ௨௪ லட்சம் கோடி 2017 இல் இருந்து சுருட்டி , இது பத்தாது என்று காங்கிரஸ் சேர்த்து வாய்த்த தேசிய சொத்துக்கள் இதையும் விற்று , வங்கிகளை திவால் ஆகி , wirteoff badDEDBTS என்று செய்து YESBANK இப்போ NO BANK ஆகியது நேர்மை நேர்மை என்று சொன்ன கூட்டம் தான்

      4

      4

 
x
News Hub
Icon