Last Updated : 05 May, 2016 09:00 AM

 

Published : 05 May 2016 09:00 AM
Last Updated : 05 May 2016 09:00 AM

மே மாதம் வெயில் மண்டையை பிளக்கும் நிலையில் வெப்ப சலனம் அதிகரித்து மழை பொழியுமா? - சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் சிறப்பு பேட்டி

மே மாதம் வெயில் மண்டையை பிளப்பது ஏன்? வெப்பச் சலனம் அதிகமாகி மழை பொழியுமா? என் பதற்கான காரணத்தை அறிவியல் பூர்வமாக விளக்கினார் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன்.

வானியல் சாஸ்திரம் அடிப்படை யில் ஒவ்வோர் ஆண்டும் மே மாதத் தில் அக்னி நட்சத்திரம் எப்போது தொடங்கி எத்தனை நாட்கள் வரை நீடிக்கும் என்று கூறப்படுகிறது. இந் தாண்டு மே 4-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரை கத்தரி வெயில் கொளுத்தும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆனால், வானியல் சாஸ்திரம் அடிப்படையில் சொல்லப் படும் அக்னி நட்சத்திர காலத்துக்கு பிறகும் சில ஆண்டுகள் வெயில் கொளுத்தியிருக்கிறது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:

வானிலை துறையில் ‘அக்னி நட் சத்திரம்’ அல்லது ‘கத்தரி வெயில்’ என்ற சொல்லே இல்லை. மே மாதம் இயல்பான கோடை காலம்தான். வானிலை தகவல்களை பெற்று, வரைபடம் தயாரித்து, வானிலை விதிகள் அடிப்படை யில் வெப்ப நிலையைக் கணிக்கிறோம்.

பொதுவாக மே மாதம் கடும் கோடை காலம் என்பதால், இந்த மாதத்தில்தான் வெப்பச் சலனம் அதிகமாக ஏற்படும். சூரிய ஒளி பூமி யில் விழுந்து பூமியில் உள்ள காற்று வெப்பமடையும். அப்போது காற்று விரிவடைந்து அதன் அடர்த்தி குறையும். அந்த நேரத்தில் மேல் நோக்கி எழும் காற்றில் ஈரப்பதம் இருந்தால் வெப்ப சலனம் உருவாகி மழை பெய்யும். அதுபோல, பருவ காலங்கள் மாறும்போது, அதாவது, தென்மேற்கு பருவமழை முடிந்து வடகிழக்கு பருவமழை தொடங் கும்போதோ, கோடைகாலம் முடிவடைந்து பருவமழை காலம் தொடங்கும்போதோ வெப்பச் சலனம் ஏற்படும். கோடை மழை பொழிவதற்கு மூலகாரணமே வெப்பச் சலனம்தான்.

பூமி சூரியனைச் சுற்றி வரும் போது பருவகாலம் வருகிறது. அதா வது கோடைகாலம், குளிர்காலம், இளவேனில் காலம் போன்றவை பூமிக்கும் சூரியனுக்குமான இடைப் பட்ட தூரத்தைப் பொறுத்து அமை யும் பருவ காலங்களாகும். பூமியில் இருந்து பார்க்கையில், சூரியன் வடக்கு நோக்கி நகரும்போது சூரிய ஒளி பூமியில் நேரடியாக விழுகிறது. அப்போது வெப்பம் அதிகமாக இருக்கும்.

இந்த அடிப்படை நிலையில் மற்ற மாற்றங்கள் நிகழும்போது வெப்ப அளவும் மாறுபடும். ஒரு இடம், கடல் பகுதியில் அமைந்திருக்கிறதா, மலைப் பகுதியில் இருக்கிறதா, அங்கே காற்று எவ்வளவு நேரம் வீசுகிறது? எந்த திசையில் இருந்து காற்று வீசிக் கொண்டிருக்கிறது? காற்றில் எவ்வளவு ஈரப்பதம் உள்ளது என்பன போன்ற பல்வேறு விஷயங்களைப் பொறுத்தே வெப்ப அளவு வேறுபடும்.

காற்றின் மூலங்கள்தான் (Heat Sources) அதன் போக்கைத் தீர்மானிக்கின்றன. பூமியில் இருந்து வெப்பக் காற்று மேல்நோக்கி செல்வது, கதிர்வீச்சு, காற்றின் உள்ளுறை வெப்பம் உள்ளிட்டவை காற்றின் மூலங்களாகும்.

பொதுவாக மே மாதத்தில் கட லோரப் பகுதிகளில் இயல்பைவிட 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை யிலும், உள் மாவட்டங்களில் இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையிலும் வெப்பம் அதிகமாக இருக்கும் என்றார் எஸ்.பாலச்சந்திரன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x