Published : 25 May 2016 08:58 AM
Last Updated : 25 May 2016 08:58 AM
மக்கள் நலக் கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேற வேண்டும் என்று விஜயகாந்திடம் அக்கட்சி யின் மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்கவும், எதிர்கால பணிகள் குறித்து திட்டமிடவும் தேமுதிக மாவட்டச் செயலாளர் கள் கூட்டம், சென்னையில் நேற்று முன்தினம் தொடங்கி நடந்து வரு கிறது. தேமுதிகவுக்கு அமைப்பு ரீதியாக உள்ள 59 மாவட்டச் செயலாளர்களில், ஒரு நாளைக்கு 20 பேர் வீதம் கடந்த 2 தினங்களாக 40 பேரிடம் ஆலோசனை நடத்தப் பட்டது. மீதமுள்ள மாவட்டச் செய லாளர்கள் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இதையடுத்து தேமுதிக சார்பில் போட்டியிட்ட 102 வேட்பாளர்களுடன் விஜய காந்த் நாளை ஆலோசனை நடத் தவுள்ளார்.
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தேமுதிக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
கடந்த 2 நாட்களாக நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத் தில், 2006, 2011 சட்டப்பேரவை தேர்தல்களிலும், 2009, 2014 மக்க ளவைத் தேர்தல்களிலும் சட்டப் பேரவை தொகுதி வாரியாக தேமுதிக பெற்ற வாக்குகள், தற் போது வாங்கியுள்ள வாக்குகள் குறித்து விஜயகாந்த் கேட்டறிந்தார். வாக்குகள் சரிந்ததற்கு என்ன காரணம், தொகுதிகளில் என் னென்ன பிரச்சினைகள் உள்ளன, தொகுதி வாரியாக ரசிகர் மன்ற காலத்தில் இருந்த உறுப்பினர் களின் எண்ணிக்கை, கடந்த 5 ஆண்டுகளின் உறுப்பினர் சேர்க்கை போன்ற விவரங்களை கேட்டறிந்தார். 54 லட்சம் உறுப் பினர்களைக் கொண்ட கட்சிக்கு வெறும் 10 லட்சத்து 34 ஆயிரம் வாக்குகள் மட்டுமே கிடைத்தது ஏன்? என்று மாவட்டச் செயலா ளர்களிடம் விஜயகாந்த் கேள்வி எழுப்பினார்.
இதற்கு மாவட்டச் செயலாளர் களும் பல்வேறு ஆலோசனை களை முன்வைத்தனர். திமுக, அதிமுகவினர்போல தேமுதிக தொண்டர்கள் பணபலம் கொண் டவர்கள் அல்ல. மக்களுக்காக மக்கள் பணி நிகழ்ச்சிகளை நடத் துவதுபோல, தொண்டர்களுக்கு உதவி செய்யும் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். தொண்டர்க ளிடம் தலைமை நெருங்கிப் பழக வேண்டும். தலைமைக்கு அடுத்த இடத்தில் இருப்பவர்கள் சொல்வ தைக் கேட்டு தொண்டர்கள் மீதோ, நிர்வாகிகள் மீதோ தலைமை நடவடிக்கை எடுக்காமல் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியனை கட்சி நடவடிக்கைக ளில் ஈடுபடச் செய்வதுடன், தொண் டர்களின் இல்ல நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் செய்ய வேண்டும். மக்கள் நலக் கூட்டணியில் தொட ருவது என்பது கட்சிக்கு உதவாது. எனவே, உள்ளாட்சித் தேர்தலை தனித்தோ அல்லது பலமான கூட் டணியோடு சந்திக்க வேண்டும். தமிழகத்தை 4 மண்டலங்களாக பிரித்து பொறுப்பாளர்களை நிய மிக்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை மாவட்டச் செய லாளர்கள் முன் வைத்துள்ளனர்.
இவ்வாறு தேமுதிக நிர்வாகிகள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT