Published : 27 Apr 2022 08:32 PM
Last Updated : 27 Apr 2022 08:32 PM

தனி நிறுவனமாக மாறும் CUMTA - இயந்திர வாகனம் அல்லாத போக்குவரத்திற்கு முக்கியத்துவம்

சென்னை: சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம் தனி நிறுவனமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இயந்திர வாகனம் அல்லாத போக்குவரத்திற்கு இந்த நிறுவனம் முக்கியத்துவம் அளிக்கவுள்ளது.

உலக வங்கி நிதி உதவியுடன் சென்னை மாநகர கூட்டாண்மை திட்டம் செயல்படுத்தபடவுள்ளது. இதில் மிக முக்கியமாக இயந்திர வாகனம் சாரா போக்குவரத்து திட்டம் மற்றும் சாலைகள் மறு சீரமைப்பு திட்டம், மல்டி மாடல் இன்டகிரேஷன் என்பது அனைத்து போக்குவரத்து வசதிகளையும் இணைக்கும் திட்டம், வாகன நிறுத்த மேலாண்மை திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில், இந்தத் திட்டத்தை சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் மூலம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இதை இறுதி செய்வதற்கான பணிகள் தொடங்கப்பட்டது.

இதன் தலைவராக முதல்வர் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், இந்த நிறுவனத்தின் விதிகளை திருத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது 6 அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டு இந்த அமைப்பு செயல்பட்டுவருகிறது. இந்தக் குழுமத்தை தனி நிறுவனமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி சிஎம்டிஏ போன்று இது தனி நிறுனவமாக மாற்றம் செய்யப்படும்.

சிஎம்டிவின் தலைவராக நகர்புற வளர்ச்சி அமைச்சர் உள்ளது போல், இதன் தலைவராக முதல்வர் செயல்பாடுவார். ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் உறுப்பினர் செயலராக நியமிக்கப்படுவார். மேலும், பல்வேறு பணியாளர்களும் விரைவில் நியமிக்கப்படவுள்ளனர். இந்தக் குழுமத்தின் செயல்பாட்டிற்கு இந்தாண்டு பட்ஜெட்டில் ரூ.9.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x