Published : 27 Apr 2022 05:51 PM
Last Updated : 27 Apr 2022 05:51 PM

தமிழகத்தில் 'சீர்திருத்தச் சிறகுகள்' திட்டம் அறிமுகம்: நீதி நிர்வாகம், சிறைத் துறையின் 32 அறிவிப்புகள்

சென்னை: சென்னை பெருநகர காவல் துறையின் மத்திய குற்றப் பிரிவால் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் வழக்குகளை பிரத்யேகமாக விசாரணை செய்ய ஒரு கூடுதல் நீதிமன்றம் அமைத்தல், அனைத்து வகையான சிறைவாசிகளையும் நல்வழிப்படுத்தி மறுவாழ்வு அளிக்க "சீர்திருத்தச் சிறகுகள்" என்கிற புதிய திட்டத்தினை தொடங்குதல் என்பது உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் நீதி நிர்வாகம், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த நீதி நிருவாகம், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, கள்ளக்குறிச்சி, தென்காசி, ராணிப்பேட்டையில் அமர்வு நீதிமன்றம் அமைத்தல், போடிநாயக்கனூர், வந்தவாசி, முசிறி, சீர்காழி, ஸ்ரீவைகுண்டத்தில் சார்பு நீதிமன்றங்கள் அமைத்தல், 24 மனநல ஆலோசகர்களுக்கு (Counsellors) தற்போது வழங்கப்பட்டு வரும் மதிப்பூதியத்தை உயர்த்தி வழங்குதல், திருச்சி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் பெண்கள் தனிச்சிறைகளில் தலா ஒரு நல அலுவலர் பணியிடத்தினை, புதியதாகத் தோற்றுவித்தல் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும், அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி விவரங்களையும் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அறிவித்தார். அவர் வெளியிட்ட 32 முக்கிய அறிவிப்புகள்:

> கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சியில் ஒரு மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் அமைத்தல்.

> தென்காசி மாவட்டம் தென்காசியில் ஒரு மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் அமைத்தல் .

> ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டையில் ஒரு மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் அமைத்தல்.

> நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் தற்போது இயங்கி வரும் மாவட்ட நீதிமன்றம் மற்றும் முதன்மை குற்றவியல் நடுவ நீதிமன்றத்தை பிரித்து தனியாக ஒரு முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்ற அமைத்தல்.

> தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் ஒரு சார்பு நீதிமன்றம் அமைத்தல்.

> திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் ஒரு சார்பு நீதிமன்றம் அமைத்தல்.

> திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறியில் ஒரு சார்பு நீதிமன்றம் அமைத்தல்.

> நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் ஒரு சார்பு நீதிமன்றம் அமைத்தல்.

> தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் ஒரு சார்பு நீதிமன்றம் அமைத்தல்.

> ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் ஒரு சார்பு நீதிமன்றம் அமைத்தல்.

> விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தில் ஒரு சார்பு நீதிமன்றம் அமைத்தல்.

> வேலூர் மாவட்டம் அணைக்கட்டில் ஒரு மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அமைத்தல்.

> ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் ஒரு மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அமைத்தல்.

> புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் ஒரு மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அமைத்தல்.

> திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூரில் ஒரு மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அமைத்தல்.

> விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் ஒரு மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அமைத்தல்.

> கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் ஒரு மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அமைத்தல்.

> காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் ஒரு மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அமைத்தல்.

> வேலூர் மாவட்டம் கே.வி. குப்பத்தில் ஒரு மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அமைத்தல்.

> செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் ஒரு மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அமைத்தல்.

> சென்னை பெருநகர காவல்துறையின் மத்திய குற்றப் பிரிவால் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் வழக்குகளை பிரத்யேகமாக விசாரணை செய்ய ஒரு
கூடுதல் நீதிமன்றம் அமைத்தல்.

> மரணமடைந்த வழக்குரைஞர்களின் வாரிசுதாரர்கள் நியமனதாரர்களுக்கு நலநிதி வழங்குவதற்காக, தமிழ்நாடு வழக்குரைஞர்கள் நலநிதிக்கு தற்போது அரசால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் , மானியத்தை ரூ.8 கோடியிலிருந்து ரூ.10 கோடியாக உயர்த்தி வழங்குதல்.

சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் அறிவிப்புகள்

> அனைத்து சிறைகள், சிறைத்துறை துணைத் தலைவர் மற்றும் தலைமை நன்னடத்தைக் கண்காணிப்பாளர் ஆகியோரின் அலுவலகங்களை நவீனமயமாக்குதல்.

> அனைத்து மத்திய சிறைகள், பெண்கள் தனிச் சிறைகள் புழல், வேலூர், திருச்சி மற்றும் மாவட்டச் சிறை (ம) பார்ஸ்டல் பள்ளி, புதுக்கோட்டை ஆகியவற்றில் உள்ள பழைய EPBAX இயந்திரங்களுக்கு பதிலாக, 13 EPBAX இயந்திரங்களும் மற்றும் தலைமையிடத்து அலுவலகம், அனைத்து மத்திய சிறைகள் மற்றும் மாவட்டச் சிறை (ம) பார்ஸ்டல் பள்ளி, புதுக்கோட்டை ஆகியவற்றில் உள்ள பழைய படிப் பெருக்கி இயந்திரங்களுக்கு பதிலாக, 11 படிப் பெருக்கி (Digital Duplicator) இயந்திரங்களும் புதியதாக கொள்முதல் செய்தல்.

> 24 மனநல ஆலோசகர்களுக்கு (Counsellors) தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.15,000, மதிப்பூதியத்தை , ரூ.25,000 ஆக , உயர்த்தி வழங்குதல்.

> சிறைவாசிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு உணவிற்காக செலவிடப்படும் தற்போதைய தொகையான ரூ.50-ஐ ரூ.100-ஆக உயர்த்தி வழங்குதல்.

> 12 சமூக இயல் வல்லுநர்களை (Social Case Work Experts), மாதம் ரூ.15,000 மதிப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்தல்.

> திருச்சி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் பெண்கள் தனிச்சிறைகளில் தலா ஒரு நல அலுவலர் (W elfare Officer) பணியிடத்தினை, புதியதாகத் தோற்றுவித்தல்.

> ஆத்தூர், செங்கல்பட்டு, கோபிச்செட்டிப்பாளையம் மாவட்டச் சிறை மற்றும் பார்ஸ்டல் பள்ளி புதுக்கோட்டை ஆகியவற்றின் பயன்பாட்டிற்கு, 100 Kv திறன் கொண்ட 4 மின்னாக்கிகள் (Generators), கொள்முதல் செய்தல்.

> அனைத்து வகையான சிறைவாசிகளையும் நல்வழிப்படுத்தி மறுவாழ்வு அளிக்க "சீர்திருத்தச் சிறகுகள்" என்கிற புதிய திட்டத்தினை தொடங்குதல்.

> சிறைவாசிகள் ஈட்டும் ஊதியத்திலிருந்து (Prisoner's wages), அவர்கள் கணக்கிற்குப் பங்கீடு செய்யப்படும் தொகையின் விகிதத்தை உயர்த்தி வழங்குதல்.

> சிறைவாசிகளின் தேநீர் விடுதியில், வாரம் ஒன்றுக்கு சிறைவாசிகள் செலவு செய்யும் தொகையின் உச்சவரம்பினை உயர்த்தி வழங்குதல்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x