Published : 26 Apr 2022 05:19 PM
Last Updated : 26 Apr 2022 05:19 PM

கோடை மின் தேவைக்காக 4.8 லட்சம் டன்கள் வெளிநாட்டு நிலக்கரி இறக்குமதி: தமிழக அரசு தகவல்

சென்னை: 4.8 லட்சம் டன்கள் வெளிநாட்டு நிலக்கரியினை இறக்குமதி செய்ய திறந்த மின் ஒப்பந்தப்புள்ளி மூலம், E-reverse ஏலத்துடன் மே 2022 மற்றும் ஜூன் மாதங்களுக்கு வாங்குவதற்கு, உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று எரிசக்தி துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .

தமிழக சட்டப்பேரவையில் இன்று எரிசக்தி துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறுகிறது. இதற்கு பதிலளித்து அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, சி.வி.கணேசன் ஆகியோர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டனர். முன்னதாக கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர். எரிசக்தி துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்:

நிலக்கரி ஒதுக்கீடு

> தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தனது 4,320 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையங்களில் 100 சதவீத நிலையை சுமை காரணியுடன் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு வரும் ஒன்றிற்கு 26.28 மில்லியன் டன்கள் நிலக்கரி தேவைப்படுகிறது.

இத்தேவைக்கான உள்நாட்டு நிலக்கரியை மகாநதி நிலக்கரி நிறுவனத்துடன் (MCL) நிலக்கரி எரிபொருள் வழங்கும் ஒப்பந்தங்கள் மூலமாக (Fuel Supply Agreements -FSAs)19.563 மில்லியன் டன் மற்றும் சிங்கரேனி நிலக்கரி நிறுவனத்துடன் (SCCL) புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) மூலமாக 4 மில்லியன் டன் பெறவும் மொத்தமாக 23.563 மில்லியன் டன் நிலக்கரி பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

> 2021-2022 ஆம் ஆண்டில் சுரங்கங்களில் இருந்து பெறப்பட்ட நிலக்கரியின் அளவானது, கடந்த 10 ஆண்டுகளில் பெறப்பட்ட நிலக்கரியின் அளவை விட அதிகம்.

தற்போது ஈசிஎல் சுரங்கத்தில் இருந்து 2 லட்சம் டன் நிலக்கரியை எண்ணூர் மற்றும் காரைக்கால் துறைமுகத்திற்கு கொண்டு செல்வதற்கும் ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட்டு ஆய்வில் உள்ளது.

இறக்குமதி நிலக்கரி

2022 பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் உள்நாட்டு நிலக்கரி விநியோகம் ஒரு நாளைக்கு 12.4 ரேக்குகள் மட்டுமே கிடைக்கப்பெற்றது. அனைத்து மின் நிலையங்களும் இயங்குவதற்கு 20 முதல் 22 ரேக்குகள் வரை நிலக்கரி தேவைப்படுகிறது.

கோடை காலத்தின் உச்சக்கட்ட மின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும், தொடர்ச்சியான உற்பத்தியைத் தக்க வைப்பதற்கும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் GCV 5000 GAR வெப்பதிறன் கொண்ட 4.8 லட்சம் டன்கள் வெளிநாட்டு நிலக்கரியினை இறக்குமதி செய்ய திறந்த மின் ஒப்பந்தப்புள்ளி (இ-டெண்டர்) மூலம் மின்- தலை கீழ் (E-reverse) ஏலத்துடன் மே 2022 மற்றும் ஜூன் மாதங்களுக்கு வாங்குவதற்கு, உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ரயில்வே தொடர்களின் பற்றாக்குறை > ரயில்வே தொடர்கள் போக்குவரத்துக்கு இருந்தும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு நாளொன்றுக்கு தேவைப்படும் 16 ரயில் தொடர்களுக்குப் பதிலாக, தற்போது நாளொன்றுக்கு 12 ரயில் தொடர்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x