Published : 23 Apr 2022 11:29 AM
Last Updated : 23 Apr 2022 11:29 AM
சென்னை: ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய 'சிங்கிள் யூஸ்' பிளாஸ்டிக்கை பயன்படுத்தக் கூடாது என்று டெலிவரி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தமிழக சுற்றுசூழல் துறை செயலாளர் சுப்ரியா சாஹூ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இருந்தும் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் இந்த பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டுவருகிறது. இதைத் தடுக்க உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் அவ்வப்போது சோதனைகள் நடத்தப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது. இது தொடர்பான வழக்கிலும் உயர் நீதிமன்றம் தொடர்ந்து உத்தரவுகளை பிறப்பித்துவருகிறது.
We have written to Zomato,Swiggy, Amazon , flipkart, supermarkets, hotels and industries to stop using single use plastic in their packaging in Tamil Nadu. Happy earth Day #EarthDay #happyEarthDay2022 #stopplasticpollution #manjappai pic.twitter.com/wNAAbMIAoZ
இந்நிலையில் டெலிவரி நிறுவனங்கள் தடை செய்யப்பட்ட 'சிங்கிள் யூஸ்' பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்று கடிதம் எழுதி உள்ளதாக தமிழக சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹூ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில்," ஸ்விக்கி, ஜூமோட்டோ, அமேசான், பிளிப்கார்ட், சூப்பர் மார்க்கெட்டுகள் உள்ளிட்டவை ஒருமுறை பயன்படுத்தக்கூடும் 'சிங்கிள் யூஸ்' பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு கடிதம் எழுதியுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT