Published : 23 Apr 2022 06:50 AM
Last Updated : 23 Apr 2022 06:50 AM

சிறுபான்மை மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகை: அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்

சென்னை:சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறை மானியக் கோரிக்கைமீதான விவாதம் நேற்று நடந்தது. இதில் உறுப்பினர்களின் கோரிக்கைகள், கேள்விகளுக்கு சிறுபான்மையினர் நலன், வெளிநாடுவாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான்பதில் அளித்தார். அவர் கூறியதாவது:

கிராமப்புறங்களில் படிக்கும் சிறுபான்மையின மாணவிகள்இடைநிற்றல் இன்றி தொடர்ந்து கல்வி பயில ஊக்கத்தொகையாக 3-5 வகுப்பு வரை படிப்பவர்களுக்கு ரூ.500-ம், 6-ம் வகுப்பு படிப்போருக்கு ரூ.1,000-ம் வழங்கப்படும். இதற்காக ரூ.2.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்குவதற்கான வழிமுறைகள் சிறுபான்மையினர் நலத் துறை மூலம் உருவாக்கப்பட்டு, இத்துறை மூலம் செயல்படுத்தப்படும்.

அனைத்து மாவட்டங்களிலும் மட்டுமின்றி, மாநில அளவிலும் சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா டிச.18-ம் தேதி கொண்டாடப்படும்.

உலமா ஓய்வூதியதாரர் இறந்த பிறகு, அவரது குடும்பம் வறுமையால் வாடாமல் இருக்கும் வகையில், அக்குடும்பத்துக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x