Published : 21 Apr 2022 11:43 AM
Last Updated : 21 Apr 2022 11:43 AM

நீர்வளத்துறை பயன்பாட்டிற்காக ரூ.6.82 கோடி மதிப்பில் வாகனங்கள்: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: நீர்வளத் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 6 கோடியே 82 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 5 கார்கள் மற்றும் 80 நீர்வளத்துறைக்கான வாகனங்களை வழங்கிடும் அடையாளமாக 10 வாகனங்களை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று (ஏப்.21) வழங்கினார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "2021-2022 ஆம் ஆண்டிற்கான நீர்வளத்துறை மானியக் கோரிக்கையில், நீர்வளத்துறையின் பயன்பாட்டில் இருந்து வரும் பழைய வாகனங்களுக்கு மாற்றாக புதிய வாகனங்கள் 3 ஆண்டுகளில் படிப்படியாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், 2021 – 2022 ஆண்டில் 5 கார்கள் மற்றும் 71 நீர்வளத்துறைக்கான வாகனங்கள், 6 கோடியே 13 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், 2022-2023 ஆண்டில் 40 நீர்வளத்துறைக்கான வாகனங்கள், 3 கோடியே 30 லட்சம் 15 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், 2023-2024 ஆண்டில் 40 நீர்வளத்துறைக்கான வாகனங்கள், 3 கோடியே 46 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும் என மொத்தம் 12 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வாகனங்கள் கொள்முதல் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி 2021-2022 ஆம் ஆண்டில் 6 கோடியே 13 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் கொள்முதல் செய்யப்பட்ட 5 கார்கள் மற்றும் 71 நீர்வளத்துறைக்கான வாகனங்கள் மற்றும் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனபடுத்தும் திட்டத்தின் கீழ், நீர்வளத் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 68 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவில் கொள்முதல் செய்யப்பட்ட 9 நீர்வளத்துறைக்கான வாகனங்கள் ஆகியவற்றை தமிழக முதல்வர் நீர்வளத்துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, நீர்வளத்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் கு.இராமமூர்த்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x