Published : 08 May 2016 01:13 PM
Last Updated : 08 May 2016 01:13 PM

மே 8 - இன்று உலக தலசீமியா தினம்: உறவுமுறை திருமணத்தால் அதிகரிக்கும் மரபணு நோய் - மாதந்தோறும் ரத்தம் செலுத்தாவிடில் ஆபத்து

உறவுமுறை திருமணங்களால் ரத்தத்தில் ஏற்படும் தலசீமியா என்னும் பரம்பரை மரபணு நோய் இன்றைய நாளில் அதிகரித்து வரு கிறது. இந்த நோய்க்கு மாதம் தோறும் உடலில் ரத்தம் ஏற்றாவிடில் நோயாளிகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.

தலசீமியா என்பது ரத்தத்தில் ஏற்படும் ஒருவகை பரம்பரை ரத்த அழிவு சோகை மரபணு நோய். பிறக்கும் குழந்தைகளுக்கு இந் நோயைக் கண்டுபிடித்து சிகிச்சை வழங்காவிட்டால் 2 வயதுக்குள் இறந்துவிடுவர். இந்த ஆபத்தான நோயைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் பரப்பவும், இந்நோய் பரவுவதைத் தடுக்கவும் ஒவ்வோர் ஆண்டும் மே 8-ம் தேதி உலக தல சீமியா தினமாக கடைப்பிடிக்கப்படு கிறது .

ஆப்பிரிக்கா, மத்திய ஆசியா மக்கள் மத்தியில் இந்நோய் அதிக ளவு காணப்படுகிறது. இந்தியாவின் வடக்குப் பகுதியில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம். இந் நோய் ஆண்டுதோறும் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நோயைத் தடுக்க மக்கள் மத்தியில் விழிப் புணர்வு ஏற்பட்டால் மட்டுமே சாத்தியம் என மருத்துவத் துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குழந்தைகள் நலத்துறை ஆராய்ச்சி மையப் பேராசிரியர் எஸ்.சண்முகசுந்தரம் கூறியதாவது:

தலசீமியா என்பது ரத்த அழிவு சோகையின் ஒரு வகை. ரத்தத்தில் சிவப்பணுக்கள் அழிந்து, புரதத்தின் அளவு குறைவதால் இந்நோய் ஏற்படுகிறது. ரத்த அணுக்களில் ஹீமோகுளோபின் என்ற புரதம் உள்ளது. இந்தப் புரதத்தின் அமைப்பு தவறாக உண்டாகும்பட் சத்தில், ரத்த அணுக்கள் எப் போதும்போல் அல்லாமல் விரைவாக அழிந்து ரத்தசோகை ஏற்படும். புரதத்தின் அமைப்பு மரபணுவின் கட்டுப்பாட்டில் உருவாகும். மரபணுவில் மாற்றம் ஏற்பட்டால் புரதத்தின் அமைப்பும் மாறுபடும். மாறுபட்ட புரதமே ரத்த சோகைக்கான காரணம். ரத்த சோகை உச்சத்தை அடையும்போது தலசீமியா ஏற்படுகிறது. இந்த நோய்க்கு தொடர் சிகிச்சை இல்லா விட்டால், இது வெகுவிரைவில் உயிர் ஆபத்தை ஏற்படுத்தும். தலசீமியா ஒரு மரபணு நோய். பிள்ளைகள் இந்த மரபணுவை பெற்றோரிடமிருந்து பெறுகின்ற னர். ஒரு பிள்ளை ஒரு பெற் றோரில் ஒருவரிடம் இருந்து மட்டும் தவறான மரபணுவைப் பெற்றால் தலசீமியா மைனர் நோய் உண்டா கும். இது பெரிய பாதிப்பை தராது. இவனுடைய அடுத்த தலைமுறையில் தலசீமியா வர வாய்ப்புகள் மிக அதிகம்.

ஒரு பிள்ளை பெற்றோர் இருவரி டம் இருந்தும் தவறான மரபணு வைப் பெற்றால் தலசீமியா மேஜர் நோய் ஏற்படும். இக்குழந்தைக்கு கடுமையான ரத்த சோகை ஏற்படும். இதைத் தொடர்ந்து அந்தக் குழந்தை உயிர் வாழ மாதம் ஒரு முறை ரத்தம் செலுத்த வேண்டும். ரத்தம் செலுத்துவதால் உடலில் இரும்புச் சத்து அதிகரித்து, இதயம், கல்லீரல் பாதிக் கும். இரும்புச் சத்தை வெளி யேற்ற டெசிராக்ஸ் என்ற மருந்தை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும், இவர்கள் மாதந்தோறும் ரத்தம் ஏற்றிக்கொள்வதுடன், டெசிராக்ஸ் மருந்தையும் ஆயுள் முழுவதும் உட்கொள்ள வேண்டும். ரத்த சோகையே இந்நோய்க்கு அடிப் படை காரணமாவதால் இக்குழந்தை கள் மருத்துவ ஆலோசனைப் பெற வேண்டும். தலசீமியா குடும்ப வரலாற்றைக் கொண்ட ஒரு பெண் கருவுற்றால், தீவிர பரிசோதனை மூலம் தலசீமியா குழந்தைப் பெறாமல் தடுக்கலாம். இதற்குத் தேவை தலசீமியாவைப் பற்றிய விழிப்புணர்வுதான். ஒருவேளை இத்தகைய பாதிப்புள்ள குழந்தை பிறந்தால் உடனடியாக மருத்துவச் சிகிச்சை பெறுவது அவசியம் என்றார்.

சிகிச்சைக்கு ரூ. 10 லட்சம் செலவு

குழந்தைகள் நலத்துறை ஆராய்ச்சி மைய பேராசிரியர் எஸ்.சண்முகசுந்தரம் மேலும் கூறியது: தற்போது எலும்பு மஜ்ஜையை மாற்றுவதன் மூலம் தலசீமியா நோய்க்கு, நிரந்தரத் தீர்வு ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. அதுவும் ஒரு சிக்கலான அதிக செலவுள்ள மருத்துவச் சிகிச்சையே. மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 குழந்தைகளுக்கு சமீபத்தில் முதல்வர் காப்பீட்டுத் திட்டம் மூலம் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் எலும்பு மஜ்ஜையை மாற்றி, இந்நோய்க்கு தீர்வு காணப்பட்டுள்ளது. தற்போது, இவர்களுக்கு மாதந்தோறும் ரத்தம் ஏற்றவேண்டிய அவசியம் இல்லை. மாத்திரை சாப்பிட வேண்டிய அவசியமில்லை. அவர்கள் ஆரோக்கியத்துடன் உள்ளனர். இந்நோய் பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் இந்த சிகிச்சையை மேற்கொள்ள முடியாது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x