Last Updated : 21 Apr, 2022 06:56 AM

 

Published : 21 Apr 2022 06:56 AM
Last Updated : 21 Apr 2022 06:56 AM

தமிழகத்தில் பதவி உயர்வை எதிர்பார்த்து காத்திருக்கும் 300+ எஸ்ஐகள்

மதுரை: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர் வாணையம் மூலம் 2008-ல் திமுக ஆட்சியின்போது, நேரடி எஸ்ஐ களாக 600-க்கும் மேற்பட்டோர் தேர்ந் தெடுக்கப்பட்டனர்.

இவர்கள் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் இருந்தால் 10 ஆண் டுகளுக்கு பிறகு ஆய்வாளராக பதவி உயர்வு அளிக்கப்படும் என் பது விதி. இந்நிலையில், பதவி உயர்வு பட்டியல் வெளியாகி 300 பேருக்கு மட்டுமே ஆய்வாளர் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. எஞ்சிய 300 பேர் எஸ்.ஐ.களாகவே பணிபுரிகின்றனர்.

தாம்பரம், மயிலாடுதுறை, திருப் பத்தூர், கள்ளக்குறிச்சி ஆகிய புதிய மாவட்டங்களில் காவல்துறை யின ருக்கான பணியிட ஒதுக்கீட்டில் 20 பெண் ஆய்வாளர்கள் உட்பட 60-க்கும் மேலான பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

மேலும், தமிழக அளவில் 90-க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள், டிஎஸ்பி பதவி உயர்வு இன்றி இருப்ப தாகவும், இவர்களுக்கு பதவி உயர்வு அளித்தால், எங்களுக்கும் பதவி உயர்வு கிடைக்கும் என பாதிக்கப்பட்ட எஸ்.ஐ.கள் தெரிவிக்கி ன்றனர். இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறியதாவது:

1997-ல் நேரடி எஸ்ஐகளாக தேர்வாகி, ஆய்வாளராக பணி புரிவோருக்கு பதவி உயர்வு (டிஎஸ்பி) பட்டியல் வெளியிட்டும் அமல்படுத்தவில்லை. 15 ஆண்டாக ஆய்வாளராகவே பணிபுரிகின்றனர். இவர்களுடன் காவல்துறை அமைச்சுப் பணி யாளர், பிற துறைகளில் பணியில் சேர்ந்த 15 ஆண்டுகளில் 3 முதல் 4 பதவி உயர்வை பெறுகின்றனர். 1997-ல் எஸ்ஐகளாக பணியில் சேர்ந்து, தற்போது ஆய்வாளராக பணிபுரியும் பலர் ஓய்வு வயதை எட்டும் நிலையில் உள்ளனர். இதுபோன்று 2008-ம் ஆண்டு எஸ்ஐகளாக தேர்வாகி காவல் நிலையங்களில் பணி யாற்றும் 300-க்கும் மேற்பட்டோர் பதவி உயர்வு இன்றி, எஸ்ஐகளாக பணியில் இருக் கிறோம்.

முன்னாள் முதல்வர் கருணா நிதியின் இருந்தபோது கொண்டுவந்த விதியின்படி காவலர்களுக்கு 10 ஆண்டில் முதல்நிலைக் காவலர், 15 ஆண்டில் தலைமைக் காவலர், 25 ஆண்டுகளில் சிறப்பு எஸ்ஐ என்ற பதவி உயர்வு வரிசையில் நேரடி எஸ்ஐகளாக பணியில் சேரு வோருக்கும் 10 ஆண்டில் ஆய் வாளர், 20 ஆண்டில் டிஎஸ்பி பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x