Published : 15 Apr 2022 11:13 AM
Last Updated : 15 Apr 2022 11:13 AM

மெரினா கடற்கரை கழிவறைகளில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு: 15 நாட்களில் சீரமைக்க அறிவுறுத்தல் 

சென்னை: மெரினா கடற்கரையில் உள்ள கழிவறைகளை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சென்னை மெரினா கடற்கரையில் ராணி மேரி கல்லூரி எதிரில் ரூ.22 லட்சம் நம்ம சென்னை செல்பி இடம் அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரைக்கு வருபவர்கள் இதன் முன் நின்றபடி செல்பி எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில் கடற்கரைக்கு வரும் இளைஞர்கள் இதன் மேல் நின்று புகைப்படம் எடுப்பது, அதில் பல வாசகங்களை எழுதி வைப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இதன் காரணமாக இந்த இடம் மிகவும் மோசமாக காட்சியளித்தது. இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இது தொடர்பாக மெரினா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இந்த பகுதியை சுத்தம் செய்யும் புதிதாக வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து அடிப்படை வசதிகளும் முழுமையாக செயல்பாட்டில் உள்ள சென்னை மாநகராட்ச ஆணையர் ககன்தீப் சிங்க நேற்று நேரில் ஆய்வு செய்தார். கலங்கரை விளக்கத்தில் தொடங்கி நடந்தே சென்று கடற்கரையில் உள்ள அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்தார்.

குறிப்பாக நம்ம சென்னை செல்பி இடம், கழிப்பறைகள், நீச்சல் குளம், புல்வெளி ஆகியவற்றை ஆய்வு செய்தார். மேலும் கழிவறைக்குள் சென்று தண்ணீர் முறையாக வருகிறாதா என்பதை ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து மெரினா கடற்கரையில் குறைபாடுகளுடன் உள்ள அடிப்படை வசதிகளை 15 நாட்களுக்குள் சீரமைக்க வேண்டும் என்று 9வது மண்டல அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையர் ககன் தீப் பேடி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இதன்படி 9வது மண்டல அலுவலர் ஜெயந்திசந்திரன் தலைமையில் அதிகாரிகள் மெரினா கடற்கரையில் உள்ள வசதிகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x