Published : 15 Apr 2016 05:03 PM
Last Updated : 15 Apr 2016 05:03 PM
தூத்துக்குடி மாவட்டத்தில் 3 தொகுதிகளில் அதிமுகவுடன் திமுக நேரடியாக மோதுகிறது. ஒரு தொகுதியில் சமத்துவ மக்கள் கட்சியுடன் களம் காண்கிறது.
கடந்த தேர்தலில் இம்மாவட்டத் தில் 3 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்ட திமுக, இந்த முறை தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில்பட்டி, திருச்செந்தூர் ஆகிய 4 தொகுதிகளில் போட்டி யிடுகிறது. ஓட்டப்பிடாரம் தொகுதி புதிய தமிழகம் கட்சிக்கும், ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதிமுகவுடன் மோதல்
இந்த 4 தொகுதிகளில் 3-ல் அதிமுகவுடன் நேரடியாக திமுக மோதுகிறது. தூத்துக்குடி தொகுதியில் முன்னாள் அமைச்சர் பெ. கீதா ஜீவன், அதிமுகவின் தற்போதைய எம்எல்ஏ சி.த.செல்லப் பாண்டியனுடன் மோதுகிறார். கீதா ஜீவன் இத்தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார்.
விளாத்திகுளத்தில் பீமராஜ், அதிமுகவின் உமாமகேஸ்வரி யுடன் பலப்பரீட்சை நடத்து கிறார். கோவில்பட்டியில் அ.சுப்பிர மணியன், அதிமுகவின் ராமானுஜம் கணேஷுடன் மோதுகிறார். இவர்கள் இருவரும் புதுமுகங்கள்.
சமகவுடன் மோதல்
திருச்செந்தூரில் தொடர்ந்து 4 முறை வென்றுள்ள எம்எல்ஏ அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், அதிமுக கூட்டணி சார்பில் சமக தலைவர் ஆர்.சரத்குமாரை எதிர்கொள்கிறார். இத்தொகுதியில் போட்டி கடுமையாக இருக்கும்.
முதல் வெற்றியை நோக்கி
கோவில்பட்டி தொகுதியில் திமுக இதுவரை வென்றதில்லை. இதனால, பெரும்பாலும் இத்தொகுதியை கூட்டணி கட்சிக்கே திமுக ஒதுக்கிவிடுவது வழக்கம். 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திமுக களம் காண்கிறது. அக்கட்சி சார்பில் கழுகுமலை பேரூராட்சித் தலைவர் அ.சுப்பிரமணியன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதிருப்தி இல்லை
தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை திமுகவில் 2 பழைய முகங்கள், 2 புதுமுகங்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் குறித்து கட்சி தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி ஏதும் இல்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT