Published : 10 Apr 2022 11:56 AM
Last Updated : 10 Apr 2022 11:56 AM

கரோனா பூஸ்டர் தடுப்பூசி: தமிழகத்தில் ஒரு சில தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே தொடக்கம்

சென்னை : 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தமிழகத்தில் ஒரு சில தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே இன்று தொடங்கியுள்ளது.

கரோனா தொற்று மேலும் பரவாமல் தடுக்க, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், தனியார் மருத்துவமனை தடுப்பூசி மையங்களில் இன்று முதல் 3-வது தவணையாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது.மேலும் ஒரு டோஸ் தடுப்பூசிக்கு ரூ.225 விலையாக நிர்ணயம் செய்து இருந்தது. இதன்படி நாடு முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனைகளில் இன்று முதல் பூஸ்டர் டோஸ தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது.

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் ஒரு சில தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி தொடங்கியது. இது குறித்து தனியார் மருத்துவமனையைகள் தரப்பில், "தமிழகத்தில் உள்ள 76 சதவீதம் பேர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இவ்வாறு 2 டோஸ் செலுத்தி கொண்டு 9 மாதங்கள் நிறைவடைந்த பிறகுதான் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய சுகாதார துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பலர் இன்னும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தத் தகுதி பெறாமல் உள்ளனர். தகுதி பெற்றுள்ள ஒரு சிலரும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வருவதில்லை. எனவே இன்று குறைவான தனியார் மருத்துவமனைகளில்தான் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கியுள்ள மத்திய அரசு, பூஸ்டர் தடுப்பூசி செலுத்திய விவரம், கோவின் இணையளத்தில் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், முன்பு வெளியிட்ட வழிகாட்டுதல்களை தனியார் கரோனா தடுப்பூசி மையங்கள் பின்பற்ற வேண்டும். பூஸ்டர் தடுப்பூசி செலுத்த, மருந்தின் விலைக்கு மேலாக ரூ.150 வரை சேவை கட்டணமாக வசூலித்துக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.

விலை குறைப்பு: கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை ரூ.600 ஆக இருந்தது. மத்திய அரசுடன் நடத்திய ஆலோசனைக்குப்பின் இதை ரூ.225-க்கு வழங்க முடிவு செய்யப்பட்டதாக இந்திய சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆதார் பூனாவாலா கூறியுள்ளார்.

இதேபோல் ரூ.1,200-க்கு விற்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசி விலையையும் ரூ.225-ஆக குறைக்க முடிவு செய்துள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் துணை நிறுவனர் சுசித்ராவும் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT   ( 8 Comments )
  • k
    knswamy

    தடுப்பூசி அறிமுக காலத்தில் கட்டணம் என்று ஒன்றிய அரசு அறிவித்ததும் பொங்கி எழுந்த்து இலவசம் கோரிய மாநில காட்சிகள் தற்போது மௌனம் சாதிப்பது ஏன்?

      பிரபாகர்

      knswamy யார் யாரிடம் இலவசம் கேட்கின்றார்கள்? நாக்பூர் சொத்தை விற்று கொடுக்கிறார்களா? எல்லாமே இங்கிருந்து எடுக்கப்பட்டதுதான்.

      2

      0

      S
      Sooriyan

      உலகத்துக்கே நாங்கள்தான் தடுப்பூசி அளித்தோம் என்று பெருமை அடித்துக்கொண்ட ஒன்றிய அரசு ,இந்த பூஸ்டர் டோஸ் ஊசியையும் ஏன் இலவசமாக போட முன்வரவில்லை?நண்பர் பூஸ்டர் டோஸ் போட்டுக்கொண்டாரா?அப்படி போட்டுக்கொண்டாரானால்,அவரைப்போன்ற குடிமகன்களுக்காகத்தான் மாநில அரசு இலவச தடுப்பூசியை கேட்டது.

      1

      0

      k
      knswamy

      இலவசம் கேட்பது தான் மாநிலங்களின் உரிமை ஆகி விட்டது.

      0

      4

      பிரபாகர்

      ஏற்கனவே அந்த இரண்டு நிறுவனங்களும் முதலுக்கு மேலாக பல மடங்கு லாபம் பார்த்துவிட்டனர். அந்த லாபத்தில் கட்சிக்கு பங்கும் போய் சேர்ந்துவிட்டது. இனி என்ன பேசி என்ன புண்ணியம்?

      6

      0

  • k
    knswamy

    விலை குறைப்பை பயன்படுத்தி தமிழக அரசு மாநிலமக்களுக்கு தனது செலவில் பூஸ்டர் ஊசியை செலுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். மாநில உரிமை மீட்க போராடும் முதல்வர் மாநில கடமையை இப்போதாவது செய்யவேண்டாமா.இருநூறு கோடி அளவுக்கு ஒன்றிய அரசு தனது செலவில் இரண்டு முறை தடுப்பூசி செலுத்தி விட்டது.ஏழ்மை வறுமை அறியாமை காரணம் காட்டி நீட் தேர்வு ரத்துக்கு போராடும் திமுக அரசு அதே காரநங்கள் பூஸ்டர் ஊசிக்கும் பொருந்தும் என்பதை உணர வேண்டும்.

 
x
News Hub
Icon