Published : 22 Apr 2016 11:57 AM
Last Updated : 22 Apr 2016 11:57 AM
1951-ம் ஆண்டில் பழனிச்சாமி கவுண்டர் (காங்கிரஸ்), 1962-ல் எல்லமநாயுடு (காங்கிரஸ்), 1967 மற்றும் 1971 ஆகிய தேர்தல்களில் மணிவாசகம் (திமுக), 1977-ல் மருதாசலம் (அதிமுக), 1980-ல் சின்னராசு (அதிமுக), 1984 மற்றும் 1991-ல் அரங்கநாயகம் (அதிமுக). 1989-ல் வெள்ளியங்கிரி (மார்க்சிஸ்ட்), 1996-ல் சி.ஆர்.ராமச்சந்திரன் (திமுக), 2001-ல் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் (தமாகா), 2006-ல் கண்ணப்பன் (மதிமுக), 2009-ல் நடந்த இடைத்தேர்தலில் எம்.என். கந்தசாமி (காங்.), 2011-ல் எஸ்.பி.வேலுமணி (அதிமுக) என வென்ற தொகுதி தொண்டாமுத்தூர்.
இப்போது 2-வது முறையாக அதிமுக சார்பில் மீண்டும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி களம் இறங்கியுள்ளார். அவர் இந்த தொகுதியில் செய்திருக்கும் பணிகள் பல. குடியிருப்புகள் உள்ள பகுதியில் மட்டுமல்ல, மேற்கே கடைகோடி மலையடிவாரம் வரை கூட பள பளக்கும் சாலைகள், தெருவிளக்கு வசதிகள், மழைநீர் சாக்கடைகள், பாலங்கள், பூங்காக்கள் என வேலுமணியின் பணிகள் பளிச்சிடுகின்றன.
சாலை, பாலம், பூங்கா, மழைநீர் வடிகால், தெருவிளக்குப் பணிகளை நிறைவேற்றுவதில் அதிவேகம் இருந்தாலும், குடிநீர் என்பது வாரத்துக்கு ஒரு முறை, 10 நாட்களுக்கு ஒரு முறையே, அதுவும் ஒரு மணி நேரம் வருகிறது. விவசாயப் பயிர்கள் எல்லாம் வன விலங்குகளால் நாசம். யானைகளை விரட்ட நடவடிக்கை இல்லை. தொழில் முன்னேற்றத்துக்கு எதுவும் நடக்கவில்லை போன்ற அதிருப்திகளையும் தொகுதியில் காணமுடிகிறது.
இத் தொகுதியில் ஆத்துப்பாலம், குனியமுத்தூர், இடையர்பாளையம், கோவைப்புதூர், செல்வபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 40 ஆயிரத்துக்கும் அதிகமான இஸ்லாமியர் வாக்குகள் உள்ளன.
அதை உத்தேசித்தே இந்த தொகுதியை மனிதநேய மக்கள் கட்சிக்கு திமுக ஒதுக்கியதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால் அது பொருத்தமானதாக இல்லை. ஏனென்றால் இஸ்லாமிய இளைஞர்கள் மிகுதியாக உள்ள எஸ்டிபிஐ கட்சியும் இந்த தொகுதியில் தனித்துப் போட்டியிடுகிறது.
நாளை உள்ளூர் விடுமுறை
மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் சையது முகமது, கட்சியின் மாநிலப் பொறுப்பில் இருக்கிறார். கட்சி சின்னத்தைப் போலவே இவருக்கும், மக்கள் மத்தியில் போதுமான அறிமுகம் இல்லை. அதனால் முதல்கட்டமாக கூட்டணிக் கட்சியினரிடையேயும், அதன் பிறகு பொதுமக்களிடையேயும் அறிமுகக் கூட்டங்களை நடத்த மனிதநேய மக்கள் கட்சி ஆலோசித்து வருகிறது. ஆனால், இதற்கு கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம்.
மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் சையது முகமது, கட்சியின் மாநிலப் பொறுப்பில் இருக்கிறார். கட்சி சின்னத்தைப் போலவே இவருக்கும், மக்கள் மத்தியில் போதுமான அறிமுகம் இல்லை. அதனால் முதல்கட்டமாக கூட்டணிக் கட்சியினரிடையேயும், அதன் பிறகு பொதுமக்களிடையேயும் அறிமுகக் கூட்டங்களை நடத்த மனிதநேய மக்கள் கட்சி ஆலோசித்து வருகிறது. ஆனால், இதற்கு கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம்.
அதேசமயம், திமுகவில் உள்ள இஸ்லாமியர் அல்லாதோர் முழுமையாக மமகவுக்கு வாக்களிப்பார்களா என்ற சந்தேகம் திமுகவினரிடம் உள்ளது. அதற்காக அவர்கள் அதிமுகவுக்கு வாக்களிப்பார்களா என்பதும் சந்தேகமே. அது, மக்கள் நலக் கூட்டணிக்கோ, பாஜக வேட்பாளருக்கோதான் சாதகம் என்றும் கூறுபவர்கள் உள்ளனர்.
அப்படிப் பார்த்தாலும் மக்கள் நலக் கூட்டணியில் வரும் தேமுதிக வேட்பாளர் கே.தியாகராஜனுக்கு பெரிய அறிமுகம் இல்லை. பாஜகவில் கருமுத்து நாகராஜன் இந்துத்வா வட்டாரத்தில் அறிமுகமானவர். திமுக, அதிமுக ஆகியவற்றின் மைனஸ் பாயிண்ட்டுகள் இவர்களின் சின்னங்களுக்கு கணிசமான வாக்குகளை பெற்றுத் தரும். ஆனால், வெற்றியை தருமா என்பது கேள்விக்குறியே.
கொமதேகவின் வைரவேல், பாமகவின் ஜெகந்நாதன் உள்ளிட்டோரும் அறிமுகமில்லாத வேட்பாளர்கள்.
தாங்கள் சார்ந்துள்ள சாதி வாக்குகளையும், கூட்டணிக் கட்சிகள் வாக்குகளையுமே இந்த புதுமுக வேட்பாளர்கள் பெறுவார்கள் எனக் கருதப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT