Published : 07 Apr 2022 12:48 PM
Last Updated : 07 Apr 2022 12:48 PM

கரோனாவில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணைத் தொகை பெற விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

சென்னை: உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி, கரோனாவில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணைத் தொகை பெற விண்ணப்பிக்க தேவையான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: "கோவிட்19 பெருத்தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்த நபர்களின் வாரிசுகளுக்கு கருணைத் தொகை வழங்குவதற்கு www.tn.gov.in என்ற இணையத்தளம் மு்லம் மனுக்கள் பெறப்பட்டு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள
இறப்பை உறுதி செய்யும் குழுவின் மூலம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இதுவரை 74,097 மனுக்கள் பெறப்பட்டு, 55,390 மனுக்களுக்கு ரு்,50,000 வீதம் நிவாரணத் தொகை வங்கப்பட்டுள்ளது, மேலும், 13,204 மனுக்கள் "இருமுறை பெறப்பட்ட மனு" என்ற அடிப்படையில் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில். உச்ச நீதிமன்றம் வழக்கு எண், I.A.NO.40111/2022 in M.A.NO.1805/ 2021 in W.PNO. 539/2021இ நாள் ,; 20.03.2022-ல் வங்கிய தீர்ப்பில் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது,

20.03.2022-க்கு முன்னர் ஏற்பட்ட கரோனா இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் 18.05.2022ம் தேதிக்குள் மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும், 20.03.2022-ம் தேதி முதல் ஏற்படும் கரோனா இறப்புகளுக்கு 90 நாட்களுக்குள் மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும், சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட நிர்வாகம் 30 தினங்களுக்குள் தீர்வு காண வேண்டும்,

காலக்கெடுவுக்குள் மனு சமர்ப்பிக்க இயலாதவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையீடு செய்யலாம். பெறப்படும் முறையீட்டு மனுவினை தகுதியின் அடிப்படையில் சென்னை பெருநகர மாநகர ஆணையர் தலைமையிலான மருத்துவக் குழு பரிசீலனை செய்து தீர்வு செய்யும்,

மாவட்டத்தில் கரோனா தொற்று நோயின் காரணமாக இறந்தவர்களின் குடும்பத்தினர் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி உரிய காலத்தில் மனு செய்து நிவாரணம் பெற்று பயன் பெறலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயா ராணி தெரிவித்துள்ளார்." இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x