Published : 07 Apr 2022 11:11 AM
Last Updated : 07 Apr 2022 11:11 AM

ஜப்பானுடன் நீண்டகால பொருளாதார, பண்பாட்டு உறவு: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

படம்: ட்விட்டர்

சென்னை: ஜப்பானுடன் நாம் பகிர்ந்து கொள்ளும் நீண்டகால பொருளாதார மற்றும் பண்பாட்டு உறவை நமது அரசு மதிக்கிறது, இது மிகவும் சிறப்பு வாய்ந்தது என தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் (06.04.2022) இந்தியாவிற்கான ஜப்பான் நாட்டு தூதர் சுசுகி சடோஷியை சந்தித்தார். இந்த சந்திப்பு தொடர்பான முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியாவிற்கான ஜப்பான தூதரின் ட்விட்டர் பதிவினை பகிர்ந்து:

"இன்று உங்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி.

ஜப்பானுடன் நாம் பகிர்ந்து கொள்ளும் நீண்டகால பொருளாதார மற்றும் பண்பாட்டு உறவை நமது அரசு மதிக்கிறது, இது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

சுற்றுலா, போக்குவரத்து, உயர்கல்வி மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் போன்ற பிற துறைகளுக்கும் இந்த ஒத்துழைப்பை விரிவுபடுத்த முடியும் என்று நான் நம்புகிறேன்."

என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x