Published : 06 Apr 2016 10:05 AM
Last Updated : 06 Apr 2016 10:05 AM
அமெரிக்காவைச் சேர்ந்த நிறு வனம் நடத்திய, கல்வியும் சமுதாய செயல் திட்டமும் என்ற போட்டியில் திருவாரூர் மாவட்டம் காளாச்சேரி மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் முதல் பரிசு வென்றுள்ளனர்.
டெல்லியில் இயங்கிவரும், அமெரிக்காவைச் சேர்ந்த ‘பிரி அமெரிக்கா’ என்ற வேலை வாய்ப்பை பெற்றுத்தரும் பணியை மேற்கொண்டுவரும் நிறுவனம், தனது சமுதாய செயல்பாடுகளில் ஒன்றாக அகில இந்திய அளவில் பள்ளி மாணவர்களுக்கான செயல்திட்ட போட்டிகளை கடந்த 6 ஆண்டுகளாக நடத்தி வருகிறது.
அதன்படி, இந்த நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் போட்டிக் கான அறிவிப்பை வெளியிட்டது. இந்தியாவில் உள்ள இன்டர்நேஷ னல் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளி கள், மெட்ரிக்குலேஷன் பள்ளி கள் விண்ணப்பித்தன. இதில் பங்கேற்க, திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள காளாச்சேரி மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாண வர்களும் விண்ணப்பித்தனர். அகில இந்திய அளவில் விண்ணப் பித்த 4,970 பள்ளிகளில் அரசுப் பள்ளி இது மட்டுமே.
கடந்த ஏப்ரல் 2-ம் தேதி டெல்லி யில் நடைபெற்ற போட்டிக்கு, ராஜஸ்தானைச் சேர்ந்த சத்திய பாரதி இன்டர்நேஷனல் பள்ளி, கொல்கத்தாவைச் சேர்ந்த மார்ட் டினர் இன்டர்நேஷனல் பள்ளி, தமிழகத்தைச் சேர்ந்த காளாச்சேரி மேற்கு அரசுப் பள்ளி ஆகிய 3 பள்ளிகளுக்கு அழைப்பு விடுக் கப்பட்டது.
காளாச்சேரி பள்ளியில் படிக் கும், 7-ம் வகுப்பு மாணவிகள் எஸ்.விஷாமுகில், ஏ.லீலா, எம்.திவ்யா, 8-ம் வகுப்பு மாணவர் எஸ்.சேதுபதி ஆகிய 4 பேரும் டெல்லி சென்றனர். அங்கு, 3 பள்ளிகளின் மாணவர்களிடமும் கல்வி, சமுதாயம் சார்ந்த செயல் திட்டங்கள் குறித்து 6 பேர் கொண்ட குழுவினர் தனித்தனியே தேர்வு நடத்தினர்.
இதில், பங்கேற்ற காளாச்சேரி பள்ளி மாணவர்கள், “எங்கள் கிராம மக்களை தற்கொலை எண்ணத்திலிருந்து நாங்கள் மீட் டெடுத்தோம்” என்று கூறியது டன், இதுதொடர்பான கட்டுரை களையும் சமர்ப்பித்தனர். இதை யடுத்து காளாச்சேரி பள்ளி மாண வர்கள் முதலிடம் பெற்றதாக அறிவிக்கப்பட்டு தங்கக்கோப்பை, பதக்கங்கள், ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை ஆகியவை வழங்கப் பட்டன.
இதுகுறித்து, காளாச்சேரி பள்ளியின் ஆங்கில பட்டதாரி ஆசிரியர் ஆனந்தன் கூறியபோது, “எங்கள் பள்ளி மாணவர்கள் ஏற்கெனவே குஜராத் மாநிலத்துக் குச் சென்று பல பரிசுகளை பெற்றுள்ளனர். இந்த ஆண்டு, ‘பிரிஅமெரிக்கா’ நிறுவனம் நடத் திய போட்டியில் முதலிடம் பிடித்துள்ளனர். போட்டியை நடத்தியவர்களின் கேள்விகளுக்கு எங்கள் பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் பதிலளித்தனர். மாநில பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநர் இளங்கோவன் ஆகி யோர், மாணவர்களை சென் னைக்கு வரவழைத்து பாராட்டினர்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT