Published : 07 Apr 2022 06:27 AM
Last Updated : 07 Apr 2022 06:27 AM

மதுரை மேயரை நிழல் போல் தொடரும் பெண் யார்? - அரசியல் கட்சியினர், அதிகாரிகள் திகைப்பு

மதுரை: மதுரை மேயர் இந்திராணியை நிழல்போல் தொடரும் பெண் யார்? என்ற கேள்வி விவாதமாக மாறியுள்ளது.

மதுரை மேயர் நிதி அமைச்சர் பழனிவேல்தியாகராஜனின் பரிந்துரையில் யாரும் எதிர்பாராத வகையில் மேயரானார். இதுவரை அரசியல் வாடையே இல்லாத, குடும்பப் பெண்ணான இவர் தற்போதுதான் முதல் முறையாக கவுன்சிலராகி மேயராகி உள்ளார்.

இவரது கணவர் வழக்கறிஞர் பொன்வசந்த் ஆரப்பாளையம் பகுதி திமுக செயலாளர். இவர் முன்னாள் சபாநாயகர் பழனிவேல்ராஜன் குடும்பத்துக்கு நெருக்கமானவராக இருந்தார்.

அவருக்குப் பிறகு அவரது மகன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு விசுவாசமாக இருந்துவருகிறார். அதற்கு கிடைத்த பரிசாகத்தான் பொன் வசந்த் மனைவி இந்திராணி மேயராக்கப்பட்டதாக திமுகவினர் கூறுகின்றனர். மேயர் இந்திராணி அரசியலில் புதுமுகம் என்பதால் தற்போதுதான் மாநகராட்சி நிர் வாகப் பணிகள், மேயருக்கான அதிகாரம் மற்றும் பணிகள் பற்றி அதிகாரிகளிடம் கேட்டும், கற்றும் தெரிந்து வருகிறார்.

இந்நிலையில் மேயர் வளர்ச்சித் திட்டப்பணிகளைப் பார்வை யிடவும், ஆய்வு செய்யவும் செல்லும்போது அவரை நிழல் போல் ஒரு பெண் தொடர்ந்து வருகிறார். ஆய்வுகளில் மேயர் அருகே அவரை விட்டு நகராமல் நின்று கொள்கிறார்.

மாநகராட்சி ஆணையர், துணை மேயர் அருகில் நிற்ப தற்குக் கூட வழிவிடாமல் மேயர் அருகே இந்தப் பெண் நிற்கி றார். அதனால், மாநகராட்சி வெளியிடும் புகைப்படங்களில் கூட இந்தப் பெண் ஆணையர், துணை மேயரை விட அதீத முக்கி யத்துவம் பெறுகிறார்.

அதுபோல், மாநகராட்சி நிகழ்ச் சிகளில் மேயர் மேடையில் நிற்கும்போதும், அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிக்கும்போதும் மேயர் அருகே அந்தப் பெண் நிற்கிறார். மேடையை விட்டு இறங்குவதில்லை. அந்தப் பெண் மேயரின் தனிப்பட்ட உதவி யாளராக இருப்பதாகக் கூறப் படுகிறது. மாநகராட்சி சார்பில் நியமிக்கப்பட்ட மேயருக்கான உதவியாளர் தனியாக உள்ளார். அவர் இதுபோல் மேயருடன் நிற்பதில்லை. அமைச்சர்கள், மேயர்களின் அதிகாரப்பூர்வ அரசு உதவியாளர்கள்கூட மேடை கள், ஆய்வுகளில் அவர்கள் அருகில் நிற்பது கிடையாது. அமைச்சர்கள், மேயர்களுக்கான உதவிகளையும், அவர்கள் கேட்கும் விவரங்களையும் கூறிவிட்டு அவர்களை விட்டு நகர்ந்து, கூப்பிடும் தொலைவில் கண் பார்வையிலேயே நிற்பார்கள். இது தான் ‘பிஏ’க்களின் வழக்கமான பணியாகக் கருதப்படுகிறது.

ஆனால், மதுரை மேயர் தனிப்பட்ட முறையில் அவரை நியமித்துள்ளதாக, உதவியாளர் என்று கூறப்படும் அந்தப் பெண் ஆய்வுகள், அரசு நிகழ்ச்சிகளில் மேயருடன் நின்று கொண்டு அவரைவிட்டு நகராமல் நிற்பது மாநகராட்சியில் மட்டும் அல்லாது பொதுமக்கள் மத்தியிலும் விவா தப்பொருளாகியுள்ளது.

இதைக்கண்டு கட்சியினர், அதிகாரிகள் திகைத்துப் போய் உள்ளார்கள்.

இதுகுறித்து மாநகராட்சி அதி காரிகளிடம் விசாரித்தபோது, அவரது பெயர் அர்ச்சனா என் றும் இதற்கு முன் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் அலுவலகத்தில் பணிபுரிந்ததும் தெரியவந்தது.

தற்போது பழனிவேல் தியாகராஜன் பரிந்துரையில் மேயரின் உதவியாளராக அதி காரப்பூர்வமற்ற வகையில் அவர் நியமிக்கப்பட்டிருக்கலாம் என்ப தால் மாநகராட்சி அதிகாரிகள் மேயருடன் நெருக்கமாக நிற்கும் அந்தப் பெண்ணை நகர்ந்து நிற்க சொல்வதற்குக் கூட தயங் குவதாகக் கூறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x