Published : 12 Apr 2016 08:36 AM
Last Updated : 12 Apr 2016 08:36 AM
பாமக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அன்புமணி ராம தாஸ், தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். வடமாவட் டங்களில் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு இருந்தபோதிலும் தென்மாவட்டங்களில் குறிப்பாக விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அவ்வளவாக இல்லை.
தங்கள் கட்சிக்கு தென்மாவட் டங்களில் நல்ல வரவேற்பு இருப் பதாகவும், இத்தேர்தலில் அங்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகவும் அன்புமணி கூறி வருகிறார். ஆனால், நிலைமை தலைகீழாக இருக்கிறது. விருதுநகருக்கு அண்மையில் சென்ற அன்புமணி ராமதாஸ், காம ராஜர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு அங்கிருந்து பஜார் வழி யாக தெப்பக்குளம் வரை சென்றார். போகும் வழியில் தள்ளுவண்டி யில் வியாபாரம் செய்வோர், சாலை யோரக் கடைகள் வைத்திருப்போர், பூ வியாபாரிகளை சந்தித்து ‘அன்புமணி ஆகிய நான்’ என்ற துண்டுப் பிரசுரத்தைக் கொடுத்தபடி பிரசாரம் செய்தார். அப்போது குறைந்த எண்ணிக்கையிலே கட்சி நிர்வாகிகள் வந்திருந்தனர்.
பின்னர் பருப்பு மில்லில் நடந்த கூட்டத்தில் விருதுநகர் வியா பாரிகளைச் சந்தித்து உள்ளூர் பிரச் சினைகள் மற்றும் அரசியல் நிலவரம் குறித்து பேசியிருக்கிறார். ஆனால், அவரது வருகை விருதுநகரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என் பதை அக்கட்சியினரே ஒப்புக் கொள் கின்றனர். திருநெல்வேலி மாவட் டத்துக்கு அண்மையில் 2 முறை சென்ற அன்புமணி, அங்கேயும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வில்லை. இதற் கான காரணம் குறித்து பாமக வட்டாரங்கள் கூறியதாவது:
தென்மாவட்டங்களில் பாமக கிளைகள் வலுவாக இல்லை. நிர்வாகிகள் இருக்கும் அளவுக்கு தொண்டர்கள் இல்லாதது பெரிய குறை. தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பாளர்கள் கிடைப்பார்களா என்பதே சந்தேகமாக இருக்கி றது. வாக்குச்சாவடி முகவர்களை நியமிக்க முடியாமல் சிரமப்படு கிறோம். மொத்தத்தில் தென் மாவட்டங்களில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பாமக தேர்தல் நடவடிக்கைகள் இல்லை என்பதே நிதர்சனம். பாமக அரங்கக் கூட்டம், பொதுக்கூட்டம் என எது வானாலும் கூட்டம் சேர்வதே பெரும் பாடாக இருக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதையறிந்த பாமக தலைமை, வடமாவட்டங்களில் வெற்றி வாய்ப்பு உள்ளது என்று கருதும் தொகுதிகளில் தீவிர கவனம் செலுத்துமாறு கட்சி நிர்வாகிகளுக்கு ரகசியமாக வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT