Published : 03 Apr 2016 09:32 AM
Last Updated : 03 Apr 2016 09:32 AM
முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வின் உறவினர் உட்பட 18 பேர் மீதான கிரானைட் முறைகேடு தொடர் பான 2 வழக்குகள் உசிலம்பட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இருந்து மேல் விசாரணைக்காக மதுரை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டன.
மதுரை மாவட்டத்தில் மேலூர், மதுரை கிழக்கு மற்றும் உசிலம்பட்டி தாலுகாவில் நடைபெற்ற கிரா னைட் முறைகேடு தொடர்பாக மேலூர், மேலவளவு, கீழவளவு, ஒத்தக்கடை, உசிலம்பட்டி காவல் நிலையங்களில் 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் 83 வழக்குகளும், எஞ்சிய வழக்குகள் உசிலம்பட்டி நீதித்துறை நடுவர் மன்றத்திலும் நிலுவையில் உள்ளன. இவற்றில் முதல்கட்டமாக மேலூர், உசிலம்பட்டி நீதிமன்றங்களில் தலா 3 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த 6 வழக்குகளின் குற்றப் பத்திரிகைகளில் கிரானைட் முறை கேட்டில் தொடர்புடையவர்கள் மீது பொதுச்சொத்துக்கு சேதம் விளை வித்தல், வெடிபொருள் சட்டம், கனிமவளச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டம் போன்ற சிறப்பு சட்டங்களிலும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. இதுபோன்று பொதுச்சொத்துக்கு சேதம் விளை வித்தல் உள்ளிட்ட சில சிறப்பு சட் டங்களின்கீழ் பதிவான வழக்கு களை நீதித்துறை நடுவர் மன்றம் விசாரிக்க முடியாது. அந்த வழக்கு களை நீதித்துறை நடுவர் விசார ணைக்கு ஏற்று மேல்விசாரணைக் காக மாவட்ட அமர்வு நீதிமன்றத் துக்கு அனுப்பிவைப்பார்.
மேலூர் நீதித்துறை நடுவர் மன் றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட 3 வழக்குகளை, அமர்வு நீதிமன்றத்துக்கு அனுப்பு வதைத் தவிர்ப்பதற்காக குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டிருந்த கடுமையான குற்றச்சாட்டுகளை விசாரணைக்கு ஏற்காமல், திருட்டு குற்றச்சாட்டை மட்டும் விசார ணைக்கு ஏற்றதால் நீதித்துறை நடுவராக இருந்த மகேந்திர பூபதிக்கு எதிராக அரசுத் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை ஏற்று குற்றப் பத்திரிகையில் கூறப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் விசாரணைக்கு ஏற்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை பின்பற்றாததால், மகேந்திரபூபதி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை/ ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தலைமை நீதிபதிக்கு உயர் நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் உத்தரவிட்டார்.
இந்த சூழலில்தான், கீழையூர், கீழவளவு பகுதிகளில் தனியார் பட்டா நிலங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்களை அரசுடமையாக்கக் கோரிய 2 வழக்குகளில் இருந்து பி.ஆர்.பழனிச்சாமியை விடுதலை செய்தும், அந்த 2 வழக்குகளையும் தாக்கல் செய்த ஐஏஎஸ் அதிகாரி அன்சுல் மிஸ்ரா, அரசு சிறப்பு வழக்கறிஞர்கள் ஞானகிரி, ஷீலா ஆகியோர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டு சர்ச்சையில் சிக்கி தற்போது பணியிடை நீக்கத்தில் உள்ளார் மகேந்திரபூபதி.
இந்நிலையில் உசிலம்பட்டி நீதித்துறை நடுவர் மன்றத்தில் குற் றப்பத்திரிகை தாக்கல் செய்யப் பட்ட 3 வழக்குகளும் நீதித்துறை நடுவர் கிறிஸ்டல் பபிதா முன் நேற்று விசாரணைக்கு வந்தன. விசாரணைக்குப் பிறகு சக்கரப்ப நாயக்கனூரில் கிரானைட் முறை கேட்டில் ஈடுபட்டது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த மோகன்ராஜ் உட்பட 7 பேர் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் உறவினர் தமிழ்செல்வி உட்பட 11 பேர் மீது பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளை மதுரை அமர்வு நீதிமன்றத்துக்கு அனுப்ப நீதித் துறை நடுவர் உத்தரவிட்டார்.
ஒத்திவைப்பு
விக்கிரமங்கலத்தில் கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பாக சென்னை கோபால், பி.ஆர்.பழனிச்சாமி ஆகியோருக்கு எதிரான வழக்கும் விசாரணைக்கு வந்தது. பி.ஆர்.பழனிச்சாமி நேரில் ஆஜரானார்.
அப்போது கோபால் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை யில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட் டது. இதையடுத்து மருத்துவச் சான் றிதழை தாக்கல் செய்ய உத்தர விட்டு, விசாரணையை ஏப். 11-க்கு நீதித்துறை நடுவர் ஒத்திவைத்தார்.
நாளை மேல்முறையீடு
கிரானைட் கற்களை அரசுடமையாக்கக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியர்களாக இருந்த அன்சுல் மிஸ்ரா, சுப்பிரமணியன் ஆகியோர் மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் இதுவரை 180 வழக்குகள் தாக்கல் செய்துள்ளனர். இதில் முதன்முறையாக தாக்கல் செய்யப்பட்ட 2 வழக்குகளை மகேந்திரபூபதி தள்ளுபடி செய்தார். மேலும் அந்த வழக்குகளை தாக்கல் செய்த அன்சுல் மிஸ்ரா மற்றும் அரசு வழக்கறிஞர்களுக்கு எதிராகவும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அரசுத் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக மேல்முறையீடு தொடர்பான அனைத்து ஆவணங்களும் தயார் செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியரின் பார்வைக்கு அரசு சிறப்பு வழக்கறிஞர்கள் அனுப்பியுள்ளனர். உயர் நீதிமன்றக் கிளையில் நாளை (ஏப். 4-ல்) மேல்முறையீடு செய்யப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT