Published : 03 Apr 2022 10:49 AM
Last Updated : 03 Apr 2022 10:49 AM
சொத்து வரியை உயர்த்தி, ஏழை எளிய மக்களை திமுக அரசு வஞ்சித்துள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் இன்று வெளியிட்ட அறிக்கையில், “ நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள கூடியிருப்புகள், தொழிற்சாலைகள் மற்றும் வணிகப் பயன்பாட்டுக் கட்டடங்களுக்கான சொத்து வரியை உயர்த்தி, ஏழையெனியா மக்களை வஞ்சித்துள்ள தி.மு.க. அரசிற்கு கடும் கண்டனம் மதுபான விற்பனையாக இருந்தாலும் சரி, நீட் தேர்வாக இருந்தாலும் சரி, பெட்ரோல் - டீசல் விலையாக இருந்தாலும் சரி, அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் அகவிலைப்படி உயர்வாக இருந்தாலும் சரி, எதுவாக இருந்தாலும் ஆட்சியில் இல்லாதபோது ஒரு கொள்கை, ஆட்சியில் இருக்கும்போது ஒரு கொள்கை என அனைத்திலும் இரட்டை வேடம் போடும் தி.மு.க. தற்போது சொத்து வரியினை அபரிமிதமாக உயர்த்தி வாக்களித்த மக்களின் மீது கூடுதல் சுமையினை அளித்துள்ளது. தி.மு.க.வின் இரட்டை வேடத்திற்கு இது மற்றுமொரு எடுத்துக்காட்டு.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் 2018 ஆம் ஆண்டு குடியிருப்புகள் மற்றும் வணிக
வளாகங்களுக்கான சொத்து வரி உயர்த்தப்பட்டபோது அதனை எதிர்த்துகுரல் கொடுத்தவர் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள். சொத்து வரி உயர்வுக்கு எதிராக அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய கட்சி தி.மு.க, இந்த சொத்து வரி 2019 ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்திலேயே திரும்பப் பெறப்பட்டதோடு, கூடுதலாக வசூலிக்கப்பட்ட வரி வரும் ஆண்டுகளில்
சரிகட்டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி கூடுதலாக வரிலிக்கப்பட்ட வரி வரும் ஆண்டுகளில் சரிகட்டப்பட்டது.
இதனையும் அப்போதைய எதிர்க் கட்சித் தலைவர் அவர்கள் விமர்சித்தார். எதிர்வரும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை முன்னிட்டு வரி உயர்வு திரும்பப் பெறப்பட்டு இருக்கிறது என்றும், கூடுதலாக வரூலிக்கப்பட்ட சொத்து வரியினை வரும் ஆண்டுகளில் சரிகட்டுவதற்குப் பதிலாக ரொக்கமாக திருப்பி அளிக்க வேண்டுமென்றும் வாதிட்டவர் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் . இவையெல்லாம் தி.மு.க, ஆட்சிக்கு வருவதற்காக அரங்கேற்றப்பட்ட கபட நாடகங்கள். தற்போது, ஆட்சிக்கு வந்த ஓராண்டிற்குள்ளேயே நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சொத்து வரியை அபரிமிதமாக உயர்த்தி தி.மு.க. அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசால் வெளியிடப்பட்ட அறிவிக்கையின்படி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள 600 மற்றும் அதற்குக் குறைவான சதுர அடி கொண்ட குடியிருப்புகளுக்கு 25 விழுக்காடும், 601 முதல் 1200 சதுர அடி வரையிலான குடியிருப்புகளுக்கு 50 விழுக்காடும், 1201 முதல் 1800 சதுர அடி வரையிலான குடியிருப்புகளுக்கு 75 விழுக்காடும், 1801-க்கு மேற்பட்ட சதுர அடி கொண்ட குடியிருப்புகளுக்கு 100 விழுக்காடும் வரி உயர்த்தப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 75 விழுக்காடும், வணிக நிறுவனங்கள் மற்றும் காலி மனைகளுக்கு 100 விழுக்காடும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியோடு 2011 ஆம் ஆண்டு இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இதர மாநகராட்சிகளில், உள்ள 600 சதுர அடிக்கு குறைவாக உள்ள குடியிருப்புகளுக்கு 25 விழுக்காடும், 601 முதல் 1200 சதுர அடி கொண்ட குடியிருப்புகளுக்கு 50 விழுக்காடும், 1201 முதல் 1800 சதுர அடி கொண்ட குடியிருப்புகளுக்கு 75 விழுக்காடும், 1801 சதுர அடிக்கு மேற்பட்ட குடியிருப்புகளுக்கு 100 விழுக்காடும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 75 விழுக்காடும், வணிக நிறுவனங்களுக்கு 100 விழுக்காடும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், சென்னையின் பிரதான பகுதிகளில் உள்ள 600 மற்றும் அதற்கு குறைவான சதுர அடி கொண்ட குடியிருப்புகளுக்கு 50 விழுக்காடும், 601 முதல் 1200 சதுர அடி கொண்ட குடியிருப்புகளுக்கு 75 விழுக்காடும், 1201 முதல் 1800 சதுர அடி கொண்ட குடியிருப்புகளுக்கு 100 விழுக்காடும், 1801 சதுர அடிக்கு மேற்பட்ட குடியிருப்புகளுக்கு 350 விழுக்காடும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தொழிற்சாலைகள், தனியார் . பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 100 விழுக்காடும் வணிக நிறுவனங்களுக்கு 150 விழுக்காடும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. குடிநீர் வரி என்பது மாநகராட்சியின் ஆண்டு மதிப்பு அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுவதால், அரசின் சொத்து வரி உயர்வு அறிவிப்பு குடிநீர் வரி உயர்வுக்கு தானாகவே வழிவகுக்கும். தமிழக மக்களுக்கு தமிழ்ப் பத்தாண்டினையொட்டி தி.மு.க.வால் அளிக்கப்பட்ட வெகுமதி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மாதம் 1,000 ரூபாய் தருகிறோம்.
முதியோர் உதவித் தொகையை 1,500 ரூபாயாக உயர்த்துகிறோம், எரிவாயு உருளைக்கு 100 ரூபாய் தருகிறோம், மாதம் ஒருமுறை மின் கட்டணம் கணக்கிடும் முறையை நடையமுறைப்படுத்துகிறோம். பெட்ரோல் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் குறைக்கிறோம், டீசல் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் குறைக்கிறோம், நியாய விலைக் கடை மூலம் உளுத்தம் பருப்பு தருகிறோம், கூடுதல் சர்க்கரை தருகிறோம், கல்விக் கடனை தள்ளுபடி செய்கிறோம் நகைக் கடனை கள்ளுபடி செய்கிறோம் என்று போலி வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு, ஆட்சிக்கு வந்த பிறகு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததோடு, நம்பி வாக்களித்த வாக்காளப் பெருமக்களிடமிருந்து வரி வசூல் வேட்டையை ஆரம்பித்திருக்கிறது தி.மு.க. இந்த வரி உயர்விற்கு அனைத்திந்திய அண்ணா கிராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வரி உயர்வின் மூலம் சொந்த வீடுகளை வைத்திருப்போர் மட்டுமல்லாமல் வாடகைக்கு குடியிருப்போரும் பாதிக்கப்படுவர்.
சொந்தக் கட்டடங்கள் வைத்திருக்கும் உரிமையாளர்கள், அந்தக் கட்டடங்களில் வாடகைக்கு. குடியிருக்கும் எமை, எளியோரின் வாடகையினை உயர்த்தக்கூடிய நிலை ஏற்படும். இதேபோல், மாத வாடகை அடிப்படையில் கடைகள், தொழிற்சாலைகள், பள்ளிகள், கல்லாரிகள் நடத்துவோரும் கூடுதல் சுமைக்கு ஆளாவதோடு, கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலையும், தொமிற்சாகைளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விலையும், பள்ளி மற்றும் கல்லூரிகளின் கட்டணமும் வெகுவாக உயரும் இது ஒரு விஷச் சூழல் போன்றது, விலைவாசி உயரவிறகும், பணவீக்கத்திற்கும் வழிவகுக்கக்கூடியது. இதனால் அனைத்துத் தரப்பினரும், குறிப்பாக ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வெகுவாகப் பாதிக்கப்படுவர்.கரேனாவிலிருந்து மீண்டு எழுவதற்குள் மீண்டும் ஒரு இடி மக்கள் மேல் விழுந்திருக்கிறது.
இந்த இடியை தாங்கிக் கொள்ளக்கூடிய நிலைமையில் மக்கள் இல்லை. மக்கள் கண்ணீர் வடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். மக்கள்” வடிக்கும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் ஆயதமாகிவிடும் என்பதை முதல்சட் இந்தத் தருணத்தில் நினைவூட்ட விரும்புகிறேன்.எனவே, அனைத்துத் தரப்பு மக்களையும் பாதிக்கும் சொத்து வரி உயர்வினை முதல்வர் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இல்லையெனில், இதனை எதிர்த்து அனைத்திந்திய அண்ணா. திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தினை தமிழ்நாடு முழுவதும் நடத்தும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...