Published : 30 Mar 2022 03:43 PM
Last Updated : 30 Mar 2022 03:43 PM
கரூர்: கரூர் மாநகரில் ஏசி வசதி கொண்ட திரையரங்குகளில் 55 நாட்களில் மீண்டும் ரூ.10 கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதால் திரையரங்க கட்டணம் ரூ.120லிருந்து ரூ.130ஆக உயர்ந்துள்ளது. இது திரை ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாநகர ஏசி திரையரங்குகளில் 55 நாட்களில் 2வது முறையாக மீண்டும் ரூ.10 கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கரூர் மாநகரில் 9 திரையரங்குகள் உள்ளன. இவற்றில் 7 ஏசி திரையரங்குகளில் ரூ.120 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் திரையரங்கக் கட்டணம் ரூ.10 உயர்த்தப்பட்டு நேற்று முன்தினம் முதல் ரூ.130 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த 25 ம் தேதி 4 ஏசி திரையரங்குகளில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியான நிலையில் கடந்த 25ம் தேதி தொடங்கி 27 ம் தேதி வரை ரூ.190 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 28 ம் தேதி முதல் 7 திரையரங்குகளிலும் வழக்கமான கட்டணத்திலிருந்து ரூ.10 கட்டணம் உயர்த்தப்பட்டு ரூ.130 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம் வரை 7 ஏசி திரையரங்குகளில் ரூ.110 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. திரையரங்குகளுக்கான 12 சதவீத ஜிஎஸ்டி கட்டணம் பிப். 1ம் தேதி முதல் 18 சதவீதமாக உயர்த்தப்படுவதாகக்கூறி திரையரங்க கட்டணம் பிப். 1 ம் தேதி முதல் ரூ.10 உயர்த்தப்பட்டு ரூ.120 ஆக உயர்த்தப்பட்டது. ரூ.10 கட்டணம் உயர்த்தப்பட்டு 55 நாட்களிலேயே திரையரங்குகளில் மீண்டும் ரூ.10 கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சினிமா ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT