Published : 28 Mar 2022 09:04 PM
Last Updated : 28 Mar 2022 09:04 PM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டன. இதனை, அம்மாவட்ட கலெக்டர் ஆர்த்தியால் துவக்கிவைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்ட பேருந்து நிலையத்திலும், முக்கிய பொது இடங்களிலும் குற்றம் புரியும் நோக்கத்தில் செயல்படும் பழைய குற்றவாளிகளையும் சந்தேக நபர்களையும் அடையாளம் காணும் வகையில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டு குற்ற தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனொரு அம்சமாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி இன்று அதிநவீன கண்காணிப்பு கேமராக்களை நிறுவும் நிகழ்வை காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் துவக்கி வைத்தார்.
இந்த கேமராக்களில் ஒரு மென்பொருள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மென்பொருள் மூலமாக, குற்றப்பின்னணி கொண்ட நபர்களின் முக அம்சங்களும் அடையாளங்களும் கணினியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த சந்தேக நபர்கள் வந்து சென்றால், இந்த அவ்வாறு அதிநவீன மென்பொருள் பொருத்தப்பட்ட கேமராக்கள் மூலமாக காவல் துறையினர் அடையாளம் கண்டு அவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க வழிவகை செய்யும்.
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகரின் முயற்சியினால் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் 31 அதிநவீன கண்காணிப்பு கேமராக்களும், ஒரகடத்தில் 110 கேமராக்களும் பொருத்தப்பட்டு உள்ளது. இதனால் பொது இடங்களில் பெண்கள் / குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, குற்றச் செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் காவல்துறைக்கு பெரிதும் உதவுதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கோயில்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் கடந்த சில மாதங்களில் மட்டும் 2125 உயர்தர கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது போன்று மேலும் சுமார் 5000 கண்காணிப்பு கேமராக்களை பொருத்த மாவட்ட காவல்துறை முயற்சி எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, குற்றங்களைக் தடுக்கவும் அதனைக் கண்டறியவும், மேலும் சிசிடிவி பதிவுகள் நீதிமன்றத்தில் சாட்சியாக ஏற்றுக்கொள்ளக்கூடிய அறிவியல் ஆதாரம் என்பதாலும் நகரம் முதல் கிராமம் வரை உள்ள அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த, தொழில் நிறுவனங்களும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் முன்வர வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT