Published : 28 Mar 2022 12:47 PM
Last Updated : 28 Mar 2022 12:47 PM

சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு நவீன முறையில் பாக்கெட் செய்த ஆவின் பால் ஏற்றுமதி

சென்னை: தமிழக பால்வளத் துறையின்கீழ் செயல்படும் ஆவின் நிறுவனம், தமிழகம் முழுவதும் இருந்து நாளொன்றுக்கு 41 லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்கிறது. இதில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் மற்றும் 25 மாவட்டஒன்றியம் மூலம் சராசரியாக 28 லட்சம் லிட்டர் பாலை விற்பனை செய்கிறது. மீதமுள்ள பாலை, ஆவின் பால் பொருட்கள் செய்யப் பயன்படுத்துகிறது.

பால் பவுடர், பால் பொருட்களை வெளி மாநிலங்களுக்கும், ஹாங்காங், சிங்கப்பூர், அரபு நாடுகள் உள்ளிட்ட வெளி நாடுகளுக்கும் ஆவின் நிறுவனம் ஏற்றுமதி செய்து வருகிறது. அமெரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு பால் பொருட்களை ஏற்றுமதி செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாலை நேரடியாக வெளிநாடுகளில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டது. அதன்படி, நவீன முறையில் பாக்கெட் செய்யப்பட்ட ஆவின் பால், பால் பவுடர், பால் பொருட்களை வெளி மாநிலங்களுக்கும், ஹாங்காங், சிங்கப்பூர், அரபு நாடுகள் உள்ளிட்ட வெளி நாடுகளுக்கும் ஆவின் நிறுவனம் ஏற்றுமதி செய்து வருகிறது. சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.

அதற்காக உயர் வெப்ப நிலையில் பாலை பதப்படுத்தி அட்டைப்பெட்டி பாக்கெட்களில் அடைக்கப்படுகிறது. திருவண்ணாமலை, சேலம், ஈரோடு ஆகிய மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் பாக்கெட் போடும் பணி நடக்கிறது. இந்த பால் ஒரு வாரம்வரை கெட்டுப் போகாமல் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரை தொடர்ந்து பால் பொருட்கள் விற்பனை செய்யப்படும் நாடுகளுக்கும் நேரடியாக பாலை ஏற்றுமதி செய்ய ஆவின் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பால் பொருட்களைஹாங்காங், சிங்கப்பூர், அரபு நாடுகளுக்கு ஆவின் ஏற்றுமதி செய்கிறது. அமெரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x