Published : 10 Jun 2014 09:00 AM
Last Updated : 10 Jun 2014 09:00 AM
கனமழை மற்றும் பயங்கர இடி, மின்னல் காரணமாக டிரான்ஸ் பார்மர்கள் (மின்மாற்றி) வெடித்ததாலும், துணை மின் நிலையங்களில் உள்ள தொழில் நுட்பக் கருவிகளில் கோளாறு ஏற்பட்டதாலும் சென்னையில் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. சுமார் 10 மணிநேரம் நீடித்த இந்த மின் தடையால் சென்னை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
சென்னையில், கடந்த சில மாதங்களாக கோடை வெயில் 100 டிகிரியைத் தாண்டி கொளுத்தி வந்தது. இந்நிலையில், ஞாயிற் றுக்கிழமை இரவு 11 மணிக்கு திடீரென இடி, மின்னலுடன் மழை பெய்தது. மழையோடு சூறைக் காற்றும் வீசியதால் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன.
சென்னை நகருக்குள் பல இடங்களில் மின்கம்பங்கள் இல்லையென்றாலும், மின்மாற்றிகளில் பாதிப்பு ஏற்பட்டன. இதனால் கொளத்தூர், கொடுங் கையூர், வில்லிவாக்கம், அயனாவரம், புளியந்தோப்பு, ராயபுரம், பெரம்பூர், அம்பத்தூர், எழும்பூர், ஆயிரம் விளக்கு, மாங்காடு, விருகம்பாக்கம், பாரிமுனை, கே.கே.நகர் மற்றும் கோடம்பாக்கம் உள் ளிட்ட பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது.
மக்கள் அவதி
நள்ளிரவு முதல் 11 மணி வரை, பெரும்பாலான இடங்களில் மின்சாரம் இல்லாமல் பொது மக்கள் அவதிப்பட்டனர். ஒரு சில இடங்களில் பிற்பகலுக்கு பின்னரே மின் விநியோகம் சீரானது.
இதுகுறித்து, மின் துறை பொறியாளர்கள் கூறியதாவது:
திடீரென வெப்பநிலை மாறி, இடி மின்னலுடன் மழை பெய்ததால், மின்மாற்றிகள், மின் கம்பங்களிலுள்ள இன்சுலேட் டர்கள், கண்டக்டர்கள் (இணைப் பான்கள்) உள்ளிட்ட தொழில் நுட்பக் கருவிகள் வெடித்து, ட்ரிப் ஆகி விட்டன. இதனால், பூமிக்கு அடியிலும், மின் கம்பங்கள் வழியாகவும் இணைக்கப்பட்டுள்ள மின்னூட்டிகளும் ட்ரிப் ஆகி மின் தடை ஏற்பட்டது.
ரூ.25 லட்சம் சேதம்
மின்மாற்றிகள் மற்றும் மின் கம்பங்களில் ட்ரிப்பர்கள் பொருத் தப்பட்டுள்ளதால் பெரிய அளவில் தொழில் நுட்பக் கருவிகளுக்கு பாதிப்பில்லை. ஆனாலும் சென்னை முழுவதும் சுமார் 25 லட்ச ரூபாய் அளவுக்கு மின்கருவிகள் சேதமடைந்தன. இதேபோல், பல இடங்களில் மின்சார ஒயர்கள் மீது மரங்கள் விழுந்ததாலும் மின் தடை ஏற்பட்டது.
மழையோடு வந்த மின்னலா லும் பெரும்பாலான இடங்களில், மின் விநியோகம் தடைபட்டது. மின்னலைப் பொறுத்தவரை அதில் ஆயிரக்கணக்கான மெகாவாட் மின்திறன் இருக்கும். வானிலி ருந்து வரும் மின்னல் நேரடியாக பூமியை நோக்கிச் சென்றுதான் சமநிலை பெற்று வலுவிழக்கும். இவ்வாறு செல்லும் போது, மின்னல் பெரும்பாலும் மின்சாரம் பாயும் ஊடகங்களில்தான் பாயும்.
திறந்தவெளியிலுள்ள மின்மாற்றிகள், துணை மின் நிலைய மின்மாற்றிகள், மின் கம்பங்களின் மின் பாதைகள் ஆகியவற்றை இது நேரடியாகத் தாக்கும் போது, அதிக வோல்டேஜ் ஏற்பட்டு, அந்தப் பாதையில் மின் விநியோகம் தடைபடும். மின்னல் தொடர்ந்து கொண்டிருந்தால், சீரமைப்புப் பணிகளையும் மேற் கொள்ள முடியாது.
அதனால் பல இடங்களில் அதிகாலையில் தான் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டோம். பல பகுதிகளில் எந்த டிரான்ஸ்பார்மர் மற்றும் மின் இணைப்புப் பெட்டி யில் ட்ரிப் ஆனது என்பதைக் கண்டுபிடிப்பதே சிரமமாகி விட்டது.
எனவே, ஒவ்வொன்றாக பார்த்து, அவற்றில் மீண்டும் ப்யூஸ் பொருத்தி, மின் விநியோகம் செய்து வருகிறோம்.
இவ்வாறு மின் துறைப் பொறியாளர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT