Last Updated : 18 Apr, 2016 07:50 AM

 

Published : 18 Apr 2016 07:50 AM
Last Updated : 18 Apr 2016 07:50 AM

மீன்பிடி தடைக்காலம் அமல்: வானகரம் மீன் சந்தைக்கு அரபிக் கடல் மீன்கள் வரத்து அதிகரிப்பு - குவியும் மீன் பிரியர்கள்

தமிழகத்தில் மீன் பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால், வானகரம் மீன் சந்தைக்கு அரபிக் கடல் மீன் களின் வரத்து அதிகரித்துள்ளது. அவற்றை வாங்குவதற்கு மீன் பிரியர்கள் நாள்தோறும் அதிகள வில் குவிகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் மதுர வாயல் அருகே உள்ளது வானகரம் மீன் சந்தை. சுமார் 2 ஏக்கர் பரப் பளவில் பார்க்கிங் வசதியுடன் பரந்து விரிந்துள்ள இந்த சந்தையில் 50-க் கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

மதுரவாயல், முகப்பேர், போரூர், திருவேற்காடு உள்ளிட்ட திருவள் ளூர் மாவட்டப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மட்டுமல்லாமல், அண்ணாநகர், அமைந்தகரை, வட பழனி, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட சென்னை பகுதிகளைச் சேர்ந்தவர் களும் விடுமுறை நாட்களில் அதிகள வில் வந்து மீன்களை வாங்கிச் செல் கின்றனர்.

திருவள்ளூர், சென்னை, காஞ்சி புரம், விழுப்புரம், திருவண்ணா மலை மாவட்டங்களைச் சேர்ந்த சில்லரை மீன் வியாபாரிகளின் மீன் தேவையையும் வானகரம் மீன் சந்தை பூர்த்தி செய்து வருகிறது.

கடந்த 15-ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 29-ம் தேதி வரை, 45 நாட்களுக்கு தமிழகத்தில் மீன்பிடி தடைக் காலம் அமலில் உள்ளது. எனவே, கேரளா, கர்நாடகா உள் ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து, அரபிக்கடல் மீன்கள் அதிகளவில் வானகரம் மீன் சந்தைக்கு வரத் தொடங்கியுள்ளன.

இதுகுறித்து, வானகரம் மீன் சந்தை நிர்வாகி துரை கூறியதாவது: ஒரு லாரிக்கு 3,500 கிலோ மீன்கள் முதல் 6 ஆயிரம் கிலோ மீன்கள் வரை ஏற்றிவரும், 20 முதல் 30 வரையிலான லாரிகள் நாள்தோறும் வருவது வழக்கம்.

தற்போது மீன்பிடி தடைக்காலம் என்பதால், கேரளா, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அரபிக் கடல் மீன்கள், தமிழகம் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த ஏரி மீன்கள், பண்ணை இறால் என தினமும், 45 முதல் 55 லாரி மீன்கள் வரை வருகின்றன. இதில், 80 சதவீதம் அரபிக் கடல் மீன்கள்தான்.

அரபிக் கடல் மீன்களை வாங்கு வதற்காக தினந்தோறும் ஆயிரக் கணக்கானோர் வானகரம் சந்தை யில் குவிகின்றனர்.

மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளபோதிலும், மீன்கள் வரத்து அதிகரித்துள்ளதால், விலையில் கடந்த வாரத்தை விட இந்த வாரம் பெரியளவில் வித்தியாசம் இல்லை.

ஒரு கிலோ வஞ்சிரம் 400-450 ரூபாய் வரையும், கொடுவாள் 270-300 ரூபாய் வரையும், சங்கரா 80-220 ரூபாய் வரையும் விற்கிறது. வவ்வால் மீன் 450 ரூபாய்க்கும், இறால்கள் 200-300 ரூபாய் வரையும், மத்தி மீன்கள் 40-50 ரூபாய் வரையும், சால மீன்கள் 60-80 ரூபாய் வரையும் விற்கப்படுகின்றன.

ஏரி மீன்களான ரோகு, கட்லா, மிருகால் வகைகள் கிலோ 100 ரூபாய்க்கும், ஜிலேப்பி மீன் 40-50 ரூபாய் வரையும் விலை போகின்றன என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x