Published : 29 Apr 2016 10:27 AM
Last Updated : 29 Apr 2016 10:27 AM
கோடை வெப்பத்தின் தாக்கத்தால் காட்டன் சேலைகளுக்கு பெண் கள் மத்தியில் வரவேற்பு அதிகரித் துள்ளது. அவற்றை கூடுதலாக உற்பத்தி செய்வதில் நெசவாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவுக்கு உட்பட்ட ஜக்கம் பட்டி, டி.சுப்புலாபுரத்தில் 3 ஆயிரத் துக்கும் மேற்பட்ட விசைத்தறி நெசவாளர்கள் உள்ளனர். இவர்கள் உற்பத்தி செய்யும் காட்டன் சேலைகள் தமிழக அரசின் இலவச வேட்டி, சேலை திட்டத்துக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பொது மக்கள் காட்டன் உடைகளை விரும்பி அணியத் தொடங்கிவுள் ளனர். இதுகுறித்து ‘தி இந்து’விடம் ஜக்கம்பட்டி விசைத்தறி நெசவாளர் களான பொன் மாடசாமி, ஈஸ்வரி ஆகியோர் கூறியதாவது:
தனியார் நிறுவன உரிமையா ளர்களிடம் இருந்து மூலப்பொருட் களைப் பெற்று, சேலைகளை உற்பத்தி செய்து தருகிறோம். ஒரு சேலைக்கு ரூ.80 கூலியாக தரு கிறார்கள். தற்போது வெப்பம் அதிகமாக இருப்பதால் காட்டன் சேலைகளுக்கு பெண்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, காட்டன் சேலை ரகங் களான கட்டம், குட்டா, பிளேன், பார்டரில் ஜரிகை வைத்த சேலை களின் உற்பத்தியை அதிகப்படுத் துமாறு தனியார் நிறுவன உரிமை யாளர்கள் கூறியுள்ளனர்.
ரகத்துக்கு தகுந்தாற்போல ஒரு சேலை ரூ.340 முதல் அதிகபட்சமாக ரூ.900 வரை விலை போகிறது. கடந்த ஆண்டைவிட, ஒரு சேலை ரூ.30 வரை விலை அதிகரித்துள்ளது. சென்னை, கோவை போன்ற வெளி மாவட்ட ஜவுளிக்கடை உரிமையாளர்களும், கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநில வியா பாரிகளும் நேரடியாக வந்து முழுத் தொகையை செலுத்தியும், சிலர் முன்பணம் கொடுத்தும் மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர்.
ஒரு நெசவாளரால் வாரத்துக்கு சராசரியாக 15 சேலைகளை உற்பத்தி செய்ய முடியும். தற்போது 20 சேலைகள் வரை உற்பத்தியை அதிகரித்துள்ளதோடு, இன்னும் கூடுதலாக உற்பத்தி செய்ய தீவிரம் காட்டி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பொன் மாடசாமி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT