Last Updated : 24 Mar, 2022 07:21 PM

 

Published : 24 Mar 2022 07:21 PM
Last Updated : 24 Mar 2022 07:21 PM

சிதம்பரம் நடராஜர் கோயில் தொடர்பாக கட்சிகள், இயக்கங்கள் ஆர்ப்பாட்டம் நடத்த 144 தடை: கோட்டாட்சியர் உத்தரவு

சிதம்பரம் நடராஜர் கோயில்

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயில் தொடர்பாக அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் ஆர்ப்பாட்டம் நடத்திட 144 தடை உத்தரவு பிறப்பித்து சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி உத்தரவிட்டுள்ளார்.

சிதம்பரம் உட்கோட்ட நிர்வாக நடுவர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் ரவி ஓர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், ''கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரம், ஸ்ரீ சபாநாயகர் திருக்கோயிலில் கனகசபையின் மீது ஏறி சாமி தரிசனம் செய்ய பொதுமக்களுக்கு அனுமதி மறுத்தது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் போராட்ட குழுவினரால் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், பல்வேறு நீதிமன்ற ஆணைகள் மற்றும் அரசாணைகளை தீவிரமாக பரிசீலனை செய்யப்பட்டு வந்த நிலையில் இந்நிகழ்வு தமிழ்நாடு மாநில அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதன் பேரில் இறுதி முடிவு எடுக்கும்பொருட்டு பல்வேறு நிலையில் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது.

எனவே, அரசின் முடிவினை எதிர்நோக்கி உள்ள நிலையில் அரசியல் கட்சிகள், பக்தி பேரவைகள் மற்றும் இதர பல்வேறு போராட்ட குழுவினர்கள் அரசின் முடிவு வரும் வரையில் எவ்வித போராட்டங்களோ, ஆர்ப்பாட்டங்களோ, கூட்டமாக கூடி ஆலோசனை மேற்கொள்ளுதலோ ஒரு மாத காலத்திற்கு செய்தல் கூடாது என இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 144-ன்படி தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இது இன்று முதல் (மார்ச் 24) முதல் உடனடியாக அமுலுக்கு வருகிறது'' என்று அந்த உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x