Published : 23 Mar 2022 05:58 AM
Last Updated : 23 Mar 2022 05:58 AM
சென்னை: திருச்சி கிராமாலயா தொண்டு நிறுவனம் மற்றும் எஸ்ஆர்எம் பல்கலைக்கழக பொது சுகாதார கல்லூரி சார்பில் தேசிய மாதவிடாய் சுகாதார மேலாண்மை குறித்த2-வது உச்சி மாநாடு சென்னை தாம்பரத்தை அடுத்த பொத்தேரியில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரியில் நேற்று தொடங்கியது.
இந்த 2 நாள் மாநாட்டை டெட்டால் தயாரிப்பு நிறுவனமான ரெக்கிட் நிறுவனத்தின் வெளிவிவகாரங்கள் பிரிவு மற்றும் தெற்காசிய இயக்குநர் ரவி பட்நாகர் தொடங்கி வைத்தார்.
கிராமாலயா நிறுவனரும் தலைமைச் செயல் அலுவலருமான எஸ்.தாமோதரன் மாநாட்டு அறிமுகவுரை ஆற்றினார். எம்எஃப்எச் இந்தியா நிர்வாக இயக்குநர் ராஜன் சாமுவேல், பெங்களூரு ஏஞ்சல் இன்வெஸ்டார் நிதி ஆலோசகர் நாகராஜ பிரகாசம், எஸ்ஆர்எம் பல்கலை. பொது சுகாதாரக் கல்லூரிடீன் டாக்டர் பத்மா வெங்கட், லீப் சிட்டீஸ் நிறுவனர் மானாஸ் ராத் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
2016-ம் ஆண்டில் ‘திருமதி இந்தியா’ பட்டம் பெற்ற ஸ்நேகா ஷெர்ஜில், மாதவிடாய் சுகாதார மேலாண்மையின் அவசியத்தை எடுத்துரைத்தார். முன்னதாக, கிராமாலயா இயக்குநர் (பெருநிறுவன சமூகபொறுப்புணர்வு) டாக்டர் ஜெ.கீதாவரவேற்றார். நிறைவாக கிராமாலயா இயக்குநர் (மாதவிடாய் சுகாதார மேலாண்மை) ப்ரீத்தி தாமோதரன் நன்றி கூறினார்.
இதைத் தொடர்ந்து கிராமாலயாவின் நிறுவனரும் தலைமைச் செயல் அலுவலருமான எஸ்.தாமோதரன் கூறியதாவது:
அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுகாதாரம், நலவாழ்வு,பொருளாதார மேம்பாடு ஆகியவற்றை எவ்வித பாலின பாகுபாடு இன்றி ஒவ்வொருவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற தலையாய நோக்குடன் திருச்சியில் 1987-ம் ஆண்டு தொடங்கப்பட்டதுதான் கிராமாலயா. இந்த உன்னதஇலக்குடன் தமிழகம், ஆந்திரா, கேரளா, தெலங்கானா, கர்நாடகம்,புதுச்சேரி ஆகிய 6 மாநிலங்களில் பணியாற்றி வருகிறோம்.
தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் 50 அரசு பள்ளிகளில் மாணவிகளுக்கான பிரத்யேக கழிப்பறையுடன் கூடிய சுகாதார வளாகம் அமைத்துள்ளோம். மேலும் வளரிளம் பருவ மாணவிகளுக்கு மாதவிடாய் சுகாதார விழிப்புணர்வு கல்வி வழங்கி வருகிறோம்.
எங்கள் பெருமுயற்சியால் புதுச்சேரியில் 26 ஆயிரம் தனிநபர் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. தமிழகத்தில் புதுக்கோட்டை, திருச்சி,ராமநாதபுரம் உட்பட 15 மாவட்டங்களில் இதுவரை 2 லட்சத்து 50 ஆயிரம் கழிவறைகள் கட்டிக்கொடுக்கப் பட்டுள்ளன.
தமிழகத்தில் திருச்சி, கேரளாவில் கொச்சி, ஆந்திராவில் கர்னூல்என 3 இடங்களில் உலக கழிப்பறைகல்லூரிகள் இயங்கி வருகின்றன.புதுச்சேரி, மைசூரிலும் உலக கழிப்பறை கல்லூரிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகள் மூலமாக மாதவிடாய் சுகாதார விழிப்புணர்வு கல்வி அளிக்கவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த மாதவிடாய் தூய்மைப் பொருட்களை விநியோகம் செய்யவும் முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு தாமோதரன் கூறினார்.
டெட்டால் தயாரிப்பு நிறுவனமான ரெக்கிட் நிறுவனத்தின் வெளிவிவகாரங்கள் பிரிவு மற்றும் தெற்காசிய இயக்குநர் ரவி பட் நாகர்கூறும்போது, ‘‘துப்புரவுப் பணியாளர்களுக்கு சுகாதாரப் பயிற்சிஅளித்து அவர்களை பணியில் அமர்த்தும் நோக்கில் இதுவரை 5 உலக கழிப்பறை கல்லூரிகளை நிறுவ தேவையான உதவிகளை செய்துள்ளோம். இந்தியா முழுவதும் மேலும் 10 உலக கழிப்பறை கல்லூரிகள் அமைக்கப்பட உள் ளன. இந்த ஆண்டு 2 கோடியே 40லட்சம் பள்ளி மாணவர்களுக்கு சுகாதார விழிப்புணர்வு கல்வி அளிக்க திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT