Published : 15 Jun 2014 11:00 AM
Last Updated : 15 Jun 2014 11:00 AM
சென்னை முகப்பேர் ஏரித்திட்டம் பகுதியில் வசிப்பவர் ரவி (69). இவர் ஆந்திராவில் தொழிலதிபராக உள்ளார். இவரது மனைவி மல்லிகா (65). இவர்களுக்கு ரோகிணி என்ற மகள் உள்ளார்.
திருப்போரூரில் உள்ள தனது நிலத்தை மல்லிகா விற்பனை செய்தார். இந்த நிலத்தை பத்திரப்பதிவு செய்து கொடுப்பதற்காக திருப்போரூர் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமையன்று மல்லிகா சென்றார். ஆனால், பத்திரப்பதிவு செய்ய காலதாமதமாகும் என்று தெரிவித்துள்ள மல்லிகா, அதை முடித்துவிட்டு இரவு 9 மணிக்கு வீடு திரும்புவதாக மகளிடம் போனில் தெரிவித்துள்ளார்.
ஆனால், நள்ளிரவாகியும் மல்லிகா வீடு திரும்பவில்லை. அவரது செல்போனும் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த ரோகிணி, உறவினர் மற்றும் நண்பர்களுக்கு போன் செய்து விசாரித்துள்ளார். ஆனால் மல்லிகாவைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், மல்லிகா காணாமல் போனது குறித்து நொளம்பூர் போலீஸ் ஸ்டேஷனில் சனிக்கிழமையன்று ரோகிணி புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், “பத்திரப்பதிவு செய்ய போவதாக தெரிவித்த என் அம்மாவை காணவில்லை. அவரை யாராவது கடத்தியிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள் ளது” என்று குறிப்பிட்டுள்ளார். இதன்படி, வழக்குபதிவு செய்துள்ள போலீஸார், மல்லிகாவை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT